Top
undefined
Begin typing your search above and press return to search.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தான் ஆள்மாறாட்டத்திற்கு அடித்தளம்! கமலை வறுத்தெடுத்த அமைச்சர்!

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தான் ஆள்மாறாட்டத்திற்கு அடித்தளம்! கமலை வறுத்தெடுத்த அமைச்சர்!

SaravanaBy : Saravana

  |  2 Oct 2019 9:46 AM GMT


இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை குறளகத்தில் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது : திடீர் என்று வந்து கருத்து சொல்பவர் கமல்,கருத்து சொன்ன பிறகு காணாமல் போய்விடுவார்.


தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்து விட்டு பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று கருத்தை சொல்லக்கூடியவர்.கமல் வழங்கும் அந்த நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் நிகழ்ச்சி. பிக் பாஸிற்கு அரசு தடை விதிக்குமா என செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.


அதற்கு, பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என கூறினார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தான் ஆள் மாறாட்டத்தை அடித்தளம் என கூறிய அமைச்சர் அந்த பெருமை கமலுக்குத்தான் சேரும் எனவும் தெரிவித்தார்.




https://kathirnews.com/2019/10/02/tamilar-complains-vijays-father-to-s-a-chandrasekhar-vajay-speech/

Next Story