Top
undefined
Begin typing your search above and press return to search.

கட்சி அலுவலத்திற்கு வரி கட்டாத தி.மு.க ! வரி கேட்டால் ஆ.ராசாவின் பெயரை சொல்லி மிரட்டல்.!

கட்சி அலுவலத்திற்கு வரி கட்டாத தி.மு.க !  வரி கேட்டால் ஆ.ராசாவின் பெயரை சொல்லி மிரட்டல்.!

SaravanaBy : Saravana

  |  3 Oct 2019 11:48 AM GMT


நீலகிரி மாவட்டம் ஊட்டியில், தி.மு.க மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயம் உள்ளது. நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திமுகவின் ஆ.ராசா ஆவர் . திமுக அலுவலக கட்டடத்திற்கு, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டண வரி மற்றும் பாதாள சாக்கடை வரி முதலியவற்றை நகராட்சிக்கு 3 ஆண்டுகளாக செலுத்தவில்லை


கடந்த மூன்று ஆண்டுகளாக 43,128 ரூபாய் வரித் தொகையை, செலுத்தாமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர, தி.மு.க கட்சியின் நிர்வாகிகள் இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதனை கண்டு கொள்ளாமல் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பெயரை சொல்லி மிரட்டி வருகின்றனர் என புகார் எழுந்துள்ளது.


இவ்வாறு நிலைமை இருக்க , நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் ஆகியோர் தனது கட்சி உறுப்பினர்களுக்கு கட்சியில் முக்கியபொறுப்பு வாங்கி தருவதாக கூறி லட்சக் கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கட்சி உறுப்பினர்கள் இதுகுறித்து பேசும் போது ஆ.ராசாவின் பெயரை சொல்லி தனது கட்சிக்காரர்களையும் மிரட்டியுள்ளானர்இது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என அக்கட்சி உறுப்பினர்கள் புலம்பி தவித்து வருகின்றனர்.


சொந்த கட்சிக்காரர்களை ஏமாற்றுவதையே கண்டுகொள்ளாத ஸ்டாலின் திமுக மாவட்ட நிர்வாகம் கவரி ஏய்ப்பு செய்ததையா கண்டுகொள்ள போகிறார் என மாவட்ட நிர்வாகம் கேள்வி எழுப்பி உள்ளனர்.




Next Story