Top
undefined
Begin typing your search above and press return to search.

அரசின் நடவடிக்கையால் காஷ்மீர் இளைஞர்கள் திருந்தி விட்டனர் - அடுத்து சிறுவர்களுக்கு குறி வைக்கும் பிரிவினைவாதிகள்.!

அரசின் நடவடிக்கையால் காஷ்மீர் இளைஞர்கள் திருந்தி விட்டனர் - அடுத்து சிறுவர்களுக்கு குறி வைக்கும் பிரிவினைவாதிகள்.!

SaravanaBy : Saravana

  |  3 Oct 2019 4:57 PM GMT


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு உரிமைகள் திரும்ப பெறப்பட்டதற்கு பின்னர் அங்கு கல் எறிந்து, கலவரத்தில் ஈடுபட்ட 144 சிறுவர்களை, காஷ்மீர் காவல்துறை கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் காஷ்மீர் இளைஞர்கள் இந்த வேலையில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசு அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவித்ததுடன், கிராமத்துக்கு 5 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்ததன் காரணமாக பல பேர் வன்முறையை கைவிட்டு திருந்தி வாழ முன்வந்துள்ளார்.


இதனை சகிக்க முடியாத பிரிவினைவாதிகள் சிறுவர்களை வைத்து மீண்டும் வன்முறையை தொடங்கியுள்ளனர். இதன் பிறகே அரசு சட்ட ரீதியிலான நடவடிக்கையை தொடங்கியுள்ளது.


இதனை திரித்து காஷ்மீர் சிறுவர்கள், பாதுகாப்புப் படையினரால் சட்ட விரோதமாக கைது செய்யப் பட்டுள்ளனர் என்று குழந்தைகள் நல ஆர்வலர் எனாக்ஷி கங்குலி மற்றும் சாந்தா சின்ஹா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், இதுதொடர்பாக விசாரணை செய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது.


நீதிபதி அலி முகமது மேக்ரே தலைமையிலான அந்தக் குழு, சிறுவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஜம்மு - காஷ் மீர் மாநில காவல்துறையினர் அளித்த அறிக்கையையே, தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.


அதில், “கல் எறிந்த தாகவும், வன்முறை நடத்தி தனியார் மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் காஷ்மீரில், இதுவரை 144 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட வில்லை. அவர்களுக்கென உருவாக்கப்பட்ட சட்டத்தின் படியே கைது செய்யப்பட்டு, குழந்தைகள் நல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


Next Story