Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு பாகிஸ்தான் பண உதவி ! சிக்கும் சீமான் !

இந்தியாவில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு பாகிஸ்தான் பண உதவி ! சிக்கும் சீமான் !

SaravanaBy : Saravana

  |  3 Oct 2019 6:22 AM GMT


காஷ்மீர் மற்றும் நாட்டில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு, புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் ஹவாலா வழியில் பணம் கொடுக்கப்பட்டது அமபலமாகி உள்ளது. இதில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள், ஹவாலா குழுக்கள் மூலம் பண பரிமாற்றம் நடைபெற்றதாக, தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து, குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்கிறது.


ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது இதனையடுத்து பல அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் உள்ளனர்.போராட்டம் நடத்தும் பிரிவினைவாத தலைவர்களுக்கு எவ்வாறு பணம் வருகிறது என என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டது. சென்ற வருடத்தில், பண உதய் குறித்து இரண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இன்று மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறது என்.ஐ.ஏ


இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ. மூத்த அதிகாரிகள் பேசிய போது : காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டும் யாசின் மாலிக் ஷபீர் ஷா, அந்த்ராபி ஆலம் மற்றும் தொழிலதிபர் ஜாகுர் அகமது வதாலி ஆகியோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என விசாரணை மேற்கொண்டோம் அதில் அவர்களின் மெயில் பேட்டிகள் பொதுக்கூட்ட வீடியோக்கள் போராட்டங்களின் அடிப்படை ஆகியவற்றை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டோம் . இதில் கிடைத்த தகவல் அடிப்படையில் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.


இது போன்ற பிரிவினைவாத தலைவர்கள், ஒன்றாக கூடி திட்டமிட்டு, மாநிலம் வாரியாக மாவட்டம், வட்டம், கிராம அளவில் தங்களது ஆதரவாளர்களை உருவாக்கி வைத்துள்ளனர். பயங்கரவாதிகளை நல்லவர்கள் போல் சித்தரிப்பது,அவர்களின் இறுதிச் சடங்குகளில் சென்று கலந்து கொள்வது, உணர்ச்சிவசமாக பேசி கலவரத்தில் இளைஞர்கள் மாணவர்களை ஈடுபடவதற்கு துாண்டி விடுவது ஆகிய செயல்களை செய்கின்றனர். பாகிஸ்தானிலிருந்து வரும் உத்தரவுகளின் அடிப்படையில், கலவரத்தை தூண்டி மக்களை திசை திருப்புவது பொது சொத்துக்களை சேதப்படுத்துவது,மக்களிடையே மத பிரிவினையை உண்டாக்குவதுபோன்ற செயல்களை பிரிவினைவாதிகளின் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் முக்கிய பணியாக இருந்துள்ளது.


பேசி தீர்வு காண கூடிய பிரச்னைகளுக்கு உணர்ச்சி பொங்க பேசி மூளை சலவை செய்து போராட்டங்களை நடத்துவது மக்களை அதற்காக துாண்டிவிட்டு, அதை கலவரமாக மாற்றுவது போன்ற சட்டம் - ஒழுங்கை சீர்குலைய வைப்பது தான் பிரிவினைவாத தலைவர்களின் முக்கிய பணியாகும். இந்தியாவில் இருந்து காஷ்மீரை தனியாக பிரிக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பது இவர்களுடைய முக்கிய குறிக்கோளாகும்.


இந்தியாவின் பிரிவினைவாத தலைவர்களை கூட்டுவதற்கு, புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் துாதரகம், பொது நிகழ்ச்சிகளை போல் ஒன்று நடத்தி பிரிவினைவாத தலைவர்களை வரவழைக்கும் அப்போது பணத்துடன், சில உத்தரவுகளும் அந்த தலைவர்களுக்கு பிறப்பிக்கப்படும். இதுமட்டுமில்லாமல் , பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள்,ஹவாலா பண பரிமாற்றம் மூலமாகவும் பிரிவினைவாத தலைவர்களுக்கு பண உதவி கிடைத்துள்ளது என கூறினார்கள்.


இந்த நிலையில் பிரிவினைவாதி தலைவன் யாசின் மாலிக் உடன் சீமான் பங்குபெற்ற போரட்டம் தொடர்பான வீடியோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்தும் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டுள்ளது தமிழகத்தில் பல போராட்டங்கள் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. அதில் யார் யார் பங்கு பெற்றார்கள் எதற்காக போராட்டம் நடத்தினார்கள் என்ற விசாரணையை சத்தமில்லாமல் செய்து வருகிறது. சீமான் திருமுருகன் காந்தி போன்றோர் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்கிறது அந்த வட்டாரங்கள்


Next Story