Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று நவராத்திரி 5 ஆம் நாள்: குழந்தை முருகனுடன் சிங்க வாகனத்தில் வந்து காட்சி அளிக்கும் ஸ்கந்தமாதா!!

இன்று நவராத்திரி 5 ஆம் நாள்: குழந்தை முருகனுடன் சிங்க வாகனத்தில் வந்து காட்சி அளிக்கும் ஸ்கந்தமாதா!!

இன்று நவராத்திரி 5 ஆம் நாள்: குழந்தை முருகனுடன் சிங்க வாகனத்தில் வந்து காட்சி அளிக்கும் ஸ்கந்தமாதா!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Oct 2019 5:45 AM GMT


நம் தமிழ்க்குடி மக்களால் மிகவும் போற்றப்படும் ஸ்ரீ முருகனின் பெயர் கார்த்திக்கேயன். இவருடைய அகில பாரத பெயர்தான் ஸ்கந்தர். இவரை கந்த பெருமான் எனவும் தமிழர்கள் நாம் அழைப்பதுண்டு. இந்த ஸ்கந்தரின் தாயான ஸ்கந்தமாதா நவராத்திரியின் ஐந்தாம் நாளில் அன்னை துர்க்கையின் ஒரு வடிவமாக நம் இல்லத்துக்கு வந்து அருள்பாலிக்க இருக்கிறாள். கொடூரமான சிங்கத்தை அடிபணியவைத்து தன குழந்தை முருகனை தன மடிமேல் அமர்த்தி அவள் சவாரி செய்வதாக சித்தரிக்கப்படுகிறாள்.


மா ஸ்கந்த மாதாவுக்கு நான்கு கைகள் உள்ளன, அவற்றில் இரண்டு புனிதமான தாமரை மலர்களை ஏந்தியுள்ளன., ஒரு கை தெய்வீகக் குழந்தையான முருகனை ஏந்தியுள்ளது. ஒன்று அபயமுத்ரா எனப்படும் ஆசீர்வதிக்கும் தோரணையில் உள்ளது. தாரகாசூரன் என்ற அரக்கன், கடுமையான தவம் செய்து பிரம்மாவை மகிழ்ச்சிப்படுத்தியதன் மூலம் அவரிடமிருந்து வரம் கேட்டான். தனக்கு சாகாவரம் கேட்டான். ஆனால் பிரம்மா மறுத்ததுடன், மரணத்திலிருந்து யாரும் தப்ப முடியாது என்று கூறினார். அதற்கு அந்த சூரன் சிவபெருமான் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இன்றி இருந்ததால் சிவனின் மகனால் மட்டுமே தன்னைக் கொல்ல முடியும் வகையில் வரம் கேட்டு பெற்றான்.


பிரம்மனிடமிருந்து வரம் கிடைத்ததும், தாரகாசூரன் அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான். இது அழிவை மட்டுமே தரும் என்று அஞ்சிய தேவர்கள் சிவனை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். இதை அடுத்து சிவன் பார்வதியை மணந்தார், அவர்களது குழந்தை கார்த்திகேயனாகிய ஸ்கந்தா இறுதியாக சூரனை அழித்து போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஸ்கந்த பகவானும் பேய்களுக்கும், தீமை தரும் அசுரர்களுக்கும் எதிரான இந்த போரில் வென்றதை அடுத்து தேவர்களின் தலைவரானார்.


நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் மா துர்காவின் ஒன்பது வெவ்வேறு அவதாரங்களை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு நம் வீட்டுக்கு வருகை தந்து நமக்கு அருள் அளிக்கப் போகிறவள் ஸ்கந்தமாதா அவதாரத்தில் வரும் ஸ்ரீ துர்க்காதேவி ஆகும். ஸ்கந்த மாதா அவதாரத்தில் வரும் ஸ்ரீ துர்கா தேவியின் வருகை சந்தான பாக்கியம் எனப்படும் சிறந்த குழந்தைகள் பாக்கியத்தை குடும்பத்துக்கு அளிக்கும் என நம்பப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News