Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் படத்தில் அக்சராஹாசன்!!

விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் படத்தில் அக்சராஹாசன்!!

விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் படத்தில் அக்சராஹாசன்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Oct 2019 6:24 AM GMT


விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் படம் அக்னி சிறகுகள் இப்படத்தில் புத்திக்காக அக்சராஹாசன் இணைந்து நடிக்கிறார் இந்நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே அக்சராஹாசன் அஜித்தின் ’விவேகம்’ மற்றும் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களில் நடித்தார்.


அக்சராஹாசன் இணைந்துள்ள நிலையில், அருண்விஜயும் மற்றும் விஜய் ஆண்டனியும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். மேலும் அக்சராஹாசன் படக்குழுவினர்களுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்தியா திரும்பும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் . மேலும் இப்படத்தில் நடிகை ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர், தலைவாசல் விஜய் உள்பட மேலும் பலர் நடித்து வருகின்றனர்.


இசை நடராஜன் சங்கரன், பாட்ஷா ஒளிப்பதிவும் மற்றும் கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தை ’மூடர் கூடம்’ நவீன் இயக்கிறார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News