Kathir News
Begin typing your search above and press return to search.

ஆட்டோ மொபைல் துறை மந்தமா ? உள்நாட்டு நுகர்வு குறைந்தாலும் ஏற்றுமதி வணிகத்தில் வெளுத்து வாங்கும் இந்திய மோட்டார் நிறுவனங்கள்!!

ஆட்டோ மொபைல் துறை மந்தமா ? உள்நாட்டு நுகர்வு குறைந்தாலும் ஏற்றுமதி வணிகத்தில் வெளுத்து வாங்கும் இந்திய மோட்டார் நிறுவனங்கள்!!

ஆட்டோ மொபைல் துறை மந்தமா ? உள்நாட்டு நுகர்வு குறைந்தாலும் ஏற்றுமதி வணிகத்தில் வெளுத்து வாங்கும் இந்திய மோட்டார் நிறுவனங்கள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Oct 2019 11:06 AM GMT


ஆட்டோமொபைல் துறை உள் நாட்டில் சுணக்க நிலையை சந்தித்தாலும் மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதியில் டிவிஎஸ், மஹேந்திரா, ஹூண்டாய், டொயாட்டோ கிர்லோஸ்கர் உட்பட பல இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து சாதனையை படைத்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் இந்தியா அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டி வருவதாகவும், இதற்கு காரணம் இந்திய ரூபாய் மதிப்பை மத்திய அரசு நிலையாக வைத்திருப்பதும், மேக் இன் இந்தியா கொள்கைப்படி நிறுவனங்கள் பெறும் சலுகைகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.


நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் உள்நாட்டு பயணிகள் கார் விற்பனை 29.4 சதவீதம் குறைந்துள்ளது மற்றும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 14.85 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் உள்நாட்டு மந்தநிலையை சமன் செய்யும் வகையில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியைத் தீவிரமாக செய்து வருகின்றனர். பிரேசில், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மலேசியா போன்ற பல வளரும் நாடுகளின் மோட்டார் வாகனத்தேவைகள் இந்தியாவை ஒத்திருப்பதால் அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சிகள் அரசின் துணையுடன் கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன.


இதன் விளைவாக பயணிகள் கார் விற்பனையில் 6.52 சதவீத வளர்ச்சியும், மோட்டார் சைக்கிள் விற்பனையில் 4.52 சதவீதமும் ஏற்றுமதியில் அதிகரித்தன. உலகெங்கிலும் ஆட்டோமொபைல் தேவை குறைந்து வந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்றுமதியில் சுணக்கமில்லாமல் இருந்து வருகிறது.





இரு சக்கர வாகனங்கள் பிரிவில், மொத்த விற்பனையில் ஏற்றுமதியின் பங்கு கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 13.12 சதவீதத்திலிருந்து, நடப்பு ஆண்டின் இதே காலக் கட்டத்தில் 15.63 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் பயணிகள் கார்களின் மொத்த ஏற்றுமதி விற்பனை 19.94 சதவீதமாக இருந்தது, இந்த ஆண்டில் 24.22 ஆக சதவீதமாக உயர்ந்தது. ஆகையால், ஆட்டோமொபைல் துறையின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட கால் பகுதி விற்பனை உலக சந்தைகளின் மூலமே இருந்து வருகிறது.


ரூபாயின் சர்வதேச மதிப்பு மற்றும் மோடி அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா கொள்கை ஏற்றுமதியின் அதிகரிப்புக்கு உதவி வருகிறது.கடந்த சில ஆண்டுகளில், நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் ஆலைகளை மேம்படுத்தி மற்ற நாடுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேலும் வளர்ச்சி அடைய வழி வகுக்கும் நிலை உள்ளது.


ஏறக்குறைய அனைத்து ஆட்டோமொபைல் மேஜர் நிறுவனங்களும் வெளிநாட்டு சந்தைகளில் விற்கப்படும் அலகுகளின் எண்ணிக்கையில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மஹிந்திரா & மஹிந்திரா ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் 42.3 சதவீதத்துடன் ஏற்றுமதியில் முன்னிலை வகித்தது , மற்ற கார் உற்பத்தியாளர்களான நிசான் (27 சதவீதம் அதிகரிப்பு), டொயோட்டா கிர்லோஸ்கர் (21 சதவீதம்) மற்றும் வோக்ஸ்வாகன் (7.3 சதவீதம்) ஆகியவை ஆரோக்கியமான நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.





மிகப்பெரிய ஆட்டோமொபைல் ஏற்றுமதியாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் கடந்த ஆண்டு 105,768 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்தது. அதே நிறுவனம் இந்த ஆண்டில் 122,518 யூனிட்டுகளை அனுப்பியுள்ளது. இது 15.84 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் மோட்டார்ஸின் சென்னை பிரிவு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு தனது விற்பனை சேவையை செய்கிறது, இது தென் கொரிய பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரம் செய்யும் நாடுகளில் 91 சதவீத இடத்தை பிடித்துள்ளது.


ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதியில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, அதே நேரத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் அவர்களது உள்நாட்டு விற்பனை சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


60 நாடுகளுக்கு இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் 5 சதவீதம் சரிவையும், ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் ஏற்றுமதியில் 6.4 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. மொத்த விற்பனையில் ஏற்றுமதியின் பங்களிப்பு 21 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. யமஹா மோட்டார் இந்தியா, பியாஜியோ மற்றும் சுசுகி ஆகிய நிறுவனங்களும் உலக சந்தையில் தங்கள் உலகளாவிய கால்தடங்களை விரிவு படுத்தியுள்ளன.


பிசினஸ் ஸ்டாண்டர்டு இதழில் வெளி வந்த ஒரு கட்டுரையின் படி, “உள்நாட்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி கணிசமான அளவுஅதிகரித்துள்ளது . ஏற்றுமதி மூலம் விற்பனை பொதுவாக 15-25 சதவீத விளிம்பு நிலையை பெறும் அதே வேலையில் , உள்நாட்டு சந்தையில் இது 11-13 சதவீதமாகும். ”


2017 ஆம் ஆண்டில் 9.5 சதவிகித அதிகரிப்புடன் இந்திய வாகனத் தொழில் உலகின் நான்காவது பெரிய இடமாக மாறியுள்ளது. உலகில் வர்த்தக வாகனங்களை உற்பத்தி செய்யும் ஏழாவது இடத்தில் நம் நாடு உள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.


கீழ்கண்ட புள்ளிவிபர படங்கள் மூலம் இவற்றை அறியலாம்.


This is a Translated Article From TFI POST


Next Story
கதிர் தொகுப்பு
Trending News