Top
undefined
Begin typing your search above and press return to search.

ரபேல் போர் விமானத்தில் பறக்கவுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

ரபேல் போர் விமானத்தில் பறக்கவுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

SaravanaBy : Saravana

  |  4 Oct 2019 10:04 AM GMT



பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அக்டோபர் 8 ஆம் தேதி பிரான்சின் தலைநகரான பாரிஸில் ரபேல் போர் விமானத்தில் பறக்கவுள்ளார். இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இந்திய விமானப்படைக்கான 36 ரபேல் போர் விமானங்கள் டசால்ட் நிறுவனத்திடமிருந்து இந்திய அரசு வாங்குகிறது. முதல் விமானம் இந்த மாதம் 8 ஆம் தேதி பாரிஸில் உள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வழங்கப்படும். அவர் இந்த விமானத்தை பெற அக்டோபர் 7 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.


அக்டோபர் 8 ஆம் தேதி பாரிஸில் இந்த நிகழ்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு முதல் ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப்படைக்கு ஒப்படைக்கப்படும். விமானத்தைப் பெற்ற பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அதில் பறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படை குழு ஏற்கனவே பாரிஸ் சென்றுள்ளது.


ரபேல் போர் விமானம் சக்திவாய்ந்த போர் உபகரணங்கள் மற்றும் ஏவுகணைகளுடன் பயன்படுத்த ஏற்றது. ரபேல் போர் விமானங்களைப் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை இந்திய விமானப்படை ஏற்கனவே உருவாக்கியுள்ளது.


இந்த ரபேல் போர் விமானங்களைப் பயன்படுத்த விமானிகளுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது. பிரான்சிலிருந்து வாங்கும் 36 ரபேல் விமானங்களில், 18 விமானங்கள் ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த விமானப்படை நிலையம் இந்தியா பாக்கிஸ்தான் எல்லையிலிருந்து 220 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மீதமுள்ள 18 விமானங்கள் மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா விமானப்படை நிலையத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரபேல் விமானங்களை நிறுத்த ரூ 400 கோடி செலவில் இந்த இரண்டு விமானப்படை தளங்களிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.


Next Story