Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்திய பொருளாதாரம் ஆபத்திலா.? ஒவ்வொரு பொய்யுரைக்கும் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்ட பதிலடி!

இந்திய பொருளாதாரம் ஆபத்திலா.? ஒவ்வொரு பொய்யுரைக்கும் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்ட பதிலடி!

SaravanaBy : Saravana

  |  4 Oct 2019 8:58 AM GMT


சமீப காலமாக சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரம் பேரழிவில் இருப்பதை போலவும், மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்கவே திண்டாடுவதாக அந்த பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. இப்படி பொய் செய்தி பரப்புபவர்கள் முதலில் கையில் எடுப்பது ஆட்டோமொபைல் துறையை தான். ஏற்கனவே ஆட்டோமொபைல் துறை எதனால் சிக்கலை சந்தித்து வருகிறது என்பதற்கு உலக ஆட்டோமொபைல் சந்தையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக விளக்கம் தரப்பட்டு, ஆதாரத்துடன் வதந்திகள் முறியடிக்கப்பட்டு விட்டது. அமெரிக்க, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


அடுத்து பார்லே-ஜி பிஸ்கட் கம்பெனி மூடப்பட்ட தகவலை பகிர்ந்து, ஐந்து ரூபாய் கொடுத்து மக்கள் பிஸ்கட் வாங்க கூட முடியாத நிலையில், இந்திய பொருளாதாரம் உள்ளது என்று வதந்தி பரப்பி பதிவிட்டு வருகின்றனர். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமல் ஒரே பாணியை பின்பற்றி வந்ததால் தான் அந்நிறுவனம் மூடப்பட்டது என்ற உண்மையான காரணத்தை யாரும் வெளியில் சொல்ல மாட்டார்கள்.


அடுத்து மக்கள் வாங்கும் திறன் குறைந்து விட்டதாக ஒரு வதந்தி பரப்புகின்றனர். அதே மக்கள் தான் எந்த வகையில் வாங்க விரும்புகின்றனர் என்பதை அடுத்து வரும் செய்திகுறிப்பு காட்டும் பாருங்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைவில்லை. மக்கள் மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பதை தான், இச்செய்தி உணர்த்துகிறது.





வேலை வாய்ப்பு குறைந்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் திறமைமிக்கவர்களுக்கு வேலைவாய்ப்பு இருந்து கொண்டே தான் உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள், புதுமைகளை உருவாக்குபவர்களுக்கு இன்னும் வாய்ப்பு காத்திருக்கிறது.





கடந்த காலண்டில் வேலை வாய்ப்பு எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை பின்வரும் தகவலை வைத்து அறியலாம்.





பல துறைகளில் திறமைமிக்கவர்கள் அதிக சம்பளத்தையும், பணி நிரந்த வாய்ப்பையும் பெறுகின்றனர்.





கிடைத்த சாக்கில் எல்லாம் அரசை குறைகூறி மக்களை ஒருவித பயத்தில் வைத்திருக்கும், தேசவிரோதிகளின் பரப்புரையை நம்பாமல், மக்களே சுயமாக சிந்தித்து உண்மை நிலையை அறிய முற்படவேண்டும்.


Next Story