Top
undefined
Begin typing your search above and press return to search.

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி குறைந்தது வட்டி!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி குறைந்தது வட்டி!

SaravanaBy : Saravana

  |  4 Oct 2019 7:42 AM GMT


RBI யின் நிதிக்கொள்கைக்கான ஆய்வு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம் இந்த முறை, இந்த ஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதம் மற்றும் வங்கிகளின் கொள்கை குறித்து ஆய்வு செய்து முடிவுகள் வெளியிடப்படும்.


இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமை வகித்தார் . இந்த முறை நடந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வங்கிகளுக்கான குறைந்தபட்ச வட்டியை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டியானது 5.40% ஆகா இருந்தது அது தற்போது 0.25% குறைக்கப்பட்டு 5.15 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளனர்.


ரெப்போ வட்டி விகிதம் ஏற்கனேவே நான்கு முறை குறியாக்கப்பட்டுள்ளது இது 5 ஆவது முறை ஆகும் 5 முறையும் சேர்த்து பார்த்தால், ரெப்போ வட்டி, கிட்ட தட்ட 1.35 % குறைக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீடு,வாகன கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தில், 2019 - 2020ம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி ஜிடிபி விகிதம் 6.9 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டதை 6.1 சதவீதமாக குறைப்பது எனவும், 2020 - 2021ஆம் ஆண்டிற்கான ஜி.டி.பி விகிதம் 7.2 சதவீதம் ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.


Next Story