Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க குறித்து அவதூறு பதிவு செய்து, பிறகு டெலீட் செய்துவிட்டு பம்மிய தி.மு.க வாரிசு எம்.எல்.ஏ TRB ராஜா! மெளனம் காக்கும் ஊடகங்கள்! சட்டம் பாயுமா?

பா.ஜ.க குறித்து அவதூறு பதிவு செய்து, பிறகு டெலீட் செய்துவிட்டு பம்மிய தி.மு.க வாரிசு எம்.எல்.ஏ TRB ராஜா! மெளனம் காக்கும் ஊடகங்கள்! சட்டம் பாயுமா?

SaravanaBy : Saravana

  |  5 Oct 2019 6:00 AM GMT


தி.மு.க-வின் மன்னார்குடி எம்.எல்.ஏ TRB ராஜா ஆவார். இவரது தந்தை முன்னாள் மத்திய அமைச்சரும் இந்நாள் பாராளமன்ற உறுப்பினருமான தி.மு.க மூத்த தலைவர் TR பாலு. தி.மு.க-வின் இக்கால கொள்கைக்கு ஏற்ப சொந்த திறமை ஏதுமின்றி, தி.மு.க மூத்த தலைவரின் வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக எம்.எல்.ஏ-வாக இருந்து வரும் பட்டத்து இளவரசரான TRB ராஜா கட்சி தலைமையை காக்கா பிடிக்க பா.ஜ.க-வை வரம்பு மீறி சமீப காலங்களில் விமர்சித்து வருகிறார். அது அவருக்கு தி.மு.க மேலிடத்தில் எந்த பலனும் அளிக்காததால், மதம் பிடித்த யானை போல தற்போது பா.ஜ.க குறித்து அவதூறு மற்றும் போலி செய்திகளை பரப்பி வருகிறார் என்கின்றனர் இணைய பயன்பாட்டாளர்கள்.


உதாரணமாக, நேற்று @DMK4TN என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பதியப்பட்ட ஒரு ட்வீட்டை TRB ராஜா ரிட்வீட் செய்து இருந்தார். அதில், திருச்சி லலிதா ஜீவல்லரியில் நகையை திருடியவர்கள் பா.ஜ.க பொறுப்பாளர்கள் என்று எழுதப்பட்டு இருந்தது.





இது போலி செய்தி என தெரிந்த பிறகும் அதை வேண்டுமென்றே பா.ஜ.க-விற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பதிந்துள்ளார் TRB ராஜா என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி இவ்வாறு கீழ்த்தரமான செயல்களை செய்வது தி.மு.க-விற்கு புதிதல்ல என்றாலும், ஒரு படித்த இளைஞரான TRB ராஜாவே இவ்வாறு நடந்துக் கொள்கிறார் என்பது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.


TRB ராஜா பதிந்த ட்வீட்டில் உள்ள விஷயதத்தை நிரூபிக்க தயாரா என பகிரங்க சவாலை விடுத்தார் தமிழக பா.ஜ.க செய்தித்தொடர்பாளரும், இளைஞரணி துணைத்தலைவருமான SG சூர்யா.




https://twitter.com/SuryahSG/status/1180080954267713536?s=20


TRB ராஜாவின் ட்வீட்டிற்கு தமிழக பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து பகிரங்கமான கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.




https://twitter.com/BJP4TamilNadu/status/1180097178603122688?s=20


பா.ஜ.க-வின் மீது பழி போடுவது மட்டும் தான் TRB ராஜாவின் எண்ணமா அல்லது திருட்டு வழக்கு விசாரணையை தங்களுக்கு வேண்டியவர்களுக்காக திசை திருப்ப TRB ராஜா இவ்வாறு பதிந்தாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


எப்போதும் கொதிநிலையில் இருக்கும் தமிழக ஊடவியலாளர்களும், ஊடகங்களும் இது குறித்து மெளனம் காப்பது அதிர்ச்சியாக இருந்தாலும், வியப்பாக இல்லை.


இந்நிலையில் தான் பதிந்தது போலி செய்தி தான் என பம்மிய TRB ராஜா தன் பதிவை சத்தமில்லாமல் அழித்து விட்டு தற்போது தலைமறைவாகியுள்ளார். குறைந்தபட்சம் தான் பதிந்தது போலி செய்தி, அதற்காக வருந்துகிறேன் என்பதை கூட பதிவு செய்ய இயலாத கோழையாக இப்படி பதுங்கியுள்ளது தி.மு.க-வின் லட்சணத்தை காட்டுகிறதாக பா.ஜ.க-வினர் தெரிவிக்கின்றனர்.




https://twitter.com/SuryahSG/status/1180340302076186624?s=20


இந்நிலையில் T.R.B.ராஜாவை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் புகார் கொடுத்துள்ளதாக பா.ஜ.க தமிழக செய்தித்தொடர்பாளர் நாராயணன் பதிவிட்டுள்ளார்.


போலி செய்திகளை பதிவது கிரிமினல் குற்றம் என்ற நிலையில் TRB ராஜா மீது சட்டம் பாயுமா? காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? போன்ற கேள்விகள் தற்போது எழுகிறது.


Next Story