Top
undefined
Begin typing your search above and press return to search.

அறிவாலயத்தை அலற வைத்த உளவுத்துறை ! தி.மு.கவின் எதிர்காலம் கேள்விக்குறி தான்!

அறிவாலயத்தை அலற வைத்த உளவுத்துறை ! தி.மு.கவின் எதிர்காலம் கேள்விக்குறி தான்!

SaravanaBy : Saravana

  |  8 Oct 2019 6:22 AM GMT


2021 இல் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் தி.மு.க ஸ்டாலின் மீது பல வழக்குகள் பாயவுள்ளது! இதற்கு தகுந்த ஆதாரங்களை சத்தமில்லாமல் சேகரித்து வருகிறது உளவுத்துறை . இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது, தனி நாடு கேட்ட விவகாரம், ஊழல் வழக்குகள், என பல தகவல்களையும் சேகரித்து வருகிறது உளவுத்துறை. கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய வீடியோக்களையும் சேகரிக்க உத்தரவிட்டுள்ளது உளவுத்துறை.


இந்நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நாங்குநேரிதொகுதியில் காங்கிரசிற்கு ஒதுக்கியது தி.மு.க இதனால் உடன்பிறப்புகள் தேர்தல் வேலையில் சுணக்கம் காட்டி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அங்கு இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களே வேலை செய்யாமல் ஒதுங்கி நிற்கின்றனர், பணத்திற்காக சீட்டை விற்று விட்டார்கள் என தென் தமிழக காங்கிரசார் கொதித்து வருகின்றனர். காஞ்சிபுரம் ரூபி மனோகர் ஏன் இங்கு வந்து போட்டியிடுகிறார் என காங்கிரசில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ராகுல் காந்தியிடம் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.






அதே போல் வசந்தகுமாரும் தனக்கு எதிராக மற்றொருவர் வளர்ந்தால் தனக்கு பாதகமாகிவிடும் என்று நினைக்கிறார் அவரும் அவரின் ஆதரவாளர்களை உப்பு சப்பிற்காக பிரச்சாரத்தில் கலந்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார் என செய்திகள் வலம் வந்துள்ளது . இதையெல்லம் மீறி கிருஸ்துவ நாடார்காளை யும் பணத்தையும் குறி வைத்து இறங்கியுள்ளார் ரூபி.


காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களை ஆளும் அ.தி.மு.க அரசு திரை மறைவாக சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களின் ஆதரவு ஓட்டுக்களை பெற முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதுபோல் நாடாளுமன்ற தேர்தலில் இருந்த ஆளும் கட்சிக்கு எதிராக இருந்த மனநிலை தற்போது இல்லை என்கிறது கள நிலவரம், அதனால் நாங்குநேரியில் அ.தி.மு.கவின் பக்கமே வெற்றியின் காற்று வீசுகிறது. இந்த இரு தொகுதியையும் இழந்தால் தி.மு.க வின் பலம் குறைய ஆரம்பித்து விடும் அதுபோல் 2021 இல் எளிதாக வெற்றியடையலாம் என நினைத்திருந்த தி.மு.க விற்கு சவாலாக அமையும் என கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.கவின் வெற்றி பிரகாசமாக உள்ளது பா.ம.க வின் செல்வாக்கு அங்கு அதிகம் இருப்பதால் அங்கு வெற்றிவாகை சூடும் என்பதில் ஐயமில்லை . என்கிறது கள நிலவரம்.


இரு தொகுதியை இழந்தால் தி.மு.க வில் இருக்கும் முக்கிய புள்ளிகள் பா.ஜ.கவை நோக்கி நகர தற்போதே காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்ட செய்தியும் அறிவாலயத்தை அதிர வைத்துள்ளது.





முக்கியமாக உதயநிதிக்கு அளிக்கும் முன்னுரிமை பல சீனியர்களுக்கு வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது, எந்த வித அனுமதியும் இன்றி கலைஞரை நேரில் சென்று பார்த்த பல சீனியர்கள் தற்போது ஸ்டாலினை சந்திக்க அனுமதி கேட்டு அறிவாலயத்தில் 2 மணி நேரம் காத்திருக்கின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அ.தி.மு.க உடைக்கிறதோ இல்லையோ தி.மு.க வின் எதிர்காலம் கேள்விக்குறிதான்!


Next Story