Top
undefined
Begin typing your search above and press return to search.

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் : பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தின் முடிவு!

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்,   62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் : பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தின் முடிவு!

SaravanaBy : Saravana

  |  10 Oct 2019 1:04 PM GMT


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுகட்டும் விதமாக, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் தற்போதைய அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் 12 சதவிகிதம் என்ற அளவிலிருந்து கூடுதலாக 5 சதவிகிதம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17 சதவிகிதம் கிடைக்க உள்ளது.


7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.


அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15,909.35 கோடியும், 2019-20 நிதியாண்டில் ரூ.10,606.20 கோடியும் செலவாகும். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் சுமார் 49.93 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், அகவிலை நிவாரண உயர்வு மூலம் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.


அகவிலைப்படி உயர்வு காரணமாக ஆண்டுதோறும் ரூ.8590.20 கோடியும், நடப்பு 2019-20 நிதியாண்டில் (ஜூலை 2019 முதல் பிப்ரவரி 2020 வரையிலான 8 மாதங்களுக்கு) ரூ.5726.80 கோடியும் கூடுதல் செலவாகும். அகவிலைப்படி நிவாரணம் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.7319.15 கோடியும், நடப்பு நிதியாண்டில் ரூ.4870 கோடியும் கூடுதல் செலவு ஏற்படும்.


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்க்கைச் செலவை ஈடுகட்டவும், அடிப்படை ஊதியம் மற்றும்  ஓய்வூதியம் கரையாமலும் பாதுகாக்கும் வகையில் அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் வழங்கப்படுகிறது. இம்முறையானது  ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என ஆண்டுதோறும் இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது.


Next Story