Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவிலேயே உருவாகும் 7.5 இலட்சம் AK-203 ரக துப்பாக்கிகள் - சகல துறைகளிலும் வளர்ச்சி காணும் இந்தியா!

இந்தியாவிலேயே உருவாகும் 7.5 இலட்சம் AK-203 ரக துப்பாக்கிகள் - சகல துறைகளிலும் வளர்ச்சி காணும் இந்தியா!

SaravanaBy : Saravana

  |  10 Oct 2019 1:23 PM GMT


இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக உள்ள AK-203 ரக துப்பாக்கிகள் உற்பத்தி விரைவில் தொடங்கப்பட உள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியா வந்த போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பாதுகாப்பு, கல்வி, ஆயுதங்கள் கொள்முதல் மற்றும் இயற்கை எரிவாயு எனப் பலதுறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


அதன்படி, இந்தியாவிலேயே தயாராகி வந்த இன்சாஸ் (INSAS -Indian Small Arms System) துப்பாக்கிகள், ரஷ்யாவின் மேம்படுத்தப்பட்ட மாடலான AK-203 ஆக செய்யப்படவுள்ளது. இதனை தொடர்ந்து உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள கோர்வா நகரில் AK-203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதி. இங்கே உருவாகும் ரஷ்யா – இந்தியா கூட்டுத் தயாரிப்பான AK-203 இன்னும் மூன்று ஆண்டுகளில் முழுவதும் இந்தியாவுக்கே சொந்தமாகிவிடும். அதன்பின்னர் நம்முடைய தேவைக்கேற்ப நாம் தயாரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.


தயாரிப்பு தொடங்கப்பட்டதும் முதலில் இந்திய இராணுவத்துக்காக 6.7 இலட்சம் துப்பாக்கிகள் உருவாக்கப்பட உள்ளன. மற்ற துறைகளுக்கு உண்டாகும் தேவையை பொறுத்து 7.5 இலட்சமாக அதிகரிக்கப்படும். technology transfer clause என்ற ஒப்பந்தத்தின் மூலம் ஒரு லட்சம் துப்பாக்கிகள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கப்படும். ஒரு AK-203 ரக துப்பாக்கி தயாரிக்க 1000 அமெரிக்க டாலர் வரை செலவாகும்.


technology transfer clause ஒப்பந்தத்தின் மூலமாக இந்த திட்டத்தில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாகும். இதன் மூலமாக புதிய வேலை வாய்ப்புகளும் உண்டாகும். சில முக்கிய அனுமதிகள் கிடைத்துவிட்ட நிலையில் விரைவில், உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.



Next Story