Top
undefined
Begin typing your search above and press return to search.

வீழ்ச்சி பொருளாதாரத்தில் அல்ல, விஷம தகவல் பரப்புபவர்களிடத்தில் தான் - வதந்திகளை உடைத்த புள்ளி விவரம்!

வீழ்ச்சி பொருளாதாரத்தில் அல்ல, விஷம தகவல் பரப்புபவர்களிடத்தில் தான் - வதந்திகளை உடைத்த புள்ளி விவரம்!

SaravanaBy : Saravana

  |  10 Oct 2019 12:13 PM GMT


Voltas, Blue Star மற்றும் Johnson ஆகிய ஏசி நிறுவனங்கள் இதுவரை இல்லாத சாதனை விற்பனை அளவை எட்டியுள்ளன. கடந்த 52 வாரங்களில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18 முதல் 28 சதவிகிதம் வரை விற்பனை அளவு அதிகரித்துள்ளது.


மத்திய அரசு கார்பரேட் வரியை குறைத்ததன் விளைவாக பல்வேறு நிறுவனங்கள் ஏற்றம் கண்டுள்ளன. அவற்றின் நிகர லாபம்  4 முதல் 12 வரை அதிகரித்துள்ளது. மேலும் குளிர்சாதன பெட்டி விற்பனையும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.


பார்லேஜி நிறுவனத்தை காரணம் காட்டி, ஐந்து ரூபாய் செலவழித்து மக்கள் பிஸ்கட் வாங்க கூட தயாராக இல்லை என்று கூறி, பொருளாதார மந்த நிலையாக சில ஊடகங்கள் சித்தரித்து வரும் நிலையில், அதே மக்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களை வாங்கியுள்ளனர்.


நாட்டின் பொருளாதாரம் சீராக சென்று கொண்டிருக்கும் நிலையில், சில இடையூறுகள் வரும் பொழுது அரசு அதற்கான திட்டங்களை வகுத்து சீர்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், சில ஊடகங்கள் தேச விரோத செயல்களில் ஈடுபடுவதை குறியாக கொண்டு இந்தியா பொருளாதாரத்தை பற்றி தவறாக சித்தரித்து விஷம தகவல்களை பரப்பி வருகின்றன.



Next Story