Top
undefined
Begin typing your search above and press return to search.

கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தயாரான அமலாக்க துறை ! இடைத்தேர்தலுக்கு தயாராகும் சிவகங்கை !

கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய  தயாரான அமலாக்க துறை ! இடைத்தேர்தலுக்கு தயாராகும் சிவகங்கை !

SaravanaBy : Saravana

  |  11 Oct 2019 3:43 AM GMT


திகார் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம். சிதம்பரம் 2006 ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த வேளையில், மலேசிய நாட்டின் முன்னணி நிறுவனம் மேக்சிஸ் அந்த நிறுவனமானது ஏர்செல் நிறுவனத்தில் சுமார் 3500 கோடி முதலீடு செய்ய இந்தியாவிடம் அனுமதி கேட்டது . அப்போது மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் மத்திய அமைச்சரவையின் பொருளாதார குழுவின் ஒப்புதல் பெறாமல் விதிதிமுறைகளை மீறி அனுமதி அளித்துள்ளார். ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் அனுமதி விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாக கூறப்படுகிறது,இது குறித்து அமலாக்க துறை விசாரணையை தொடங்கியது,சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க சி.பி.ஐ யும் களத்தில் குதித்தது. ஏர் செல் மேக்சிஸ் இந்த நிலையில் வழக்கில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என பயந்து முன் ஜாமீன் பெற்றனர் அப்பாவும் மகனும்.


ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் அனுமதி விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாக கூறப்படுகிறது,இது குறித்து அமலாக்க துறை விசாரணையை தொடங்கியது,சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க சி.பி.ஐ யும் களத்தில் குதித்தது. ஏர் செல் மேக்சிஸ் இந்த நிலையில் வழக்கில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என பயந்து முன் ஜாமீன் பெற்றனர் அப்பாவும் மகனும்.


இதனையடுத்து ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில்,முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கும் கார்த்திக் சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்க துறை சார்பில் புது டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளானர் . இவ்வழக்கு இம்மதத்திற்குள் நீதி மன்ற விசாரணைக்குஎன கூறுகிறது அமலாக்கத்துறை. அது மட்டுமில்லாமல் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் அது இந்த வழக்கில் மேலும் வலு சேர்க்கும் அவர் இவ்வழக்கில் இருந்து விடுபட முடியாது எனவும் கூறுகிறது.


ஏற்கனவே ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற காவல், வருகின்ற 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், சிதம்பரத்தின் முன் ஜாமின் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.அவ்வாறு ஜாமீன் ரத்து செய்யப்பட்டால் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்க துறை ரெடியாக உள்ளது.


முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று முன்தினம், புது டில்லியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்க துறை சார்பில் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


முன் ஜாமின் ரத்து செய்யப்படும் பட்சத்தில் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்க துறை கைது செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் சிறை சென்றால் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்பதில் வருகிறது அமலாக்க துறை. சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் வேலைகளை ஆரம்பியுங்கள் என்ற ரகசிய உத்தரவும் பிறப்பிக்கபட்டுள்ளது


Next Story