Kathir News
Begin typing your search above and press return to search.

சிறந்த சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மரணம்! அடாது இசை மழை பொய்து.! விடாது விருதுகள் பல பெற்றவர்!!

சிறந்த சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மரணம்! அடாது இசை மழை பொய்து.! விடாது விருதுகள் பல பெற்றவர்!!

சிறந்த சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மரணம்! அடாது இசை மழை பொய்து.! விடாது விருதுகள் பல பெற்றவர்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Oct 2019 6:41 AM GMT



பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக மங்களூரில் காலமானார். இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். கலாநிகேதனாவை சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடம் சாக்சபோன் வாசிப்பை கற்ற இவர், சென்னையில் பிரபல மிருதங்க இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.


கத்ரி கோபால்நாத்தின் இசை சேவையை பாராட்டி மத்திய அரசு 2004-ல் பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கவுரவித்தது. சாக்சபோன் மேதை கத்ரி கோபால்நாத்துக்கு தமிழக அரசும் கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்தது. சாக்சபோன் சக்ரவர்த்தி, சாக்சபோன் சாம்ராட், கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார்.


கே.பாலசந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றியிருந்தார் கத்ரி கோபால்நாத். டூயட் படத்தின் அனைத்து பாடல்களிலும் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் ருத்ரேசு மகந்தப்பாவுடன் இணைந்து 2005-ல் கின்ஸ்மென் இசைத்தொகுப்பை வெளியிட்டார்.


ஜாஸ்புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஜேம்சுடன் இணைந்து சதர்ன் பிரதர்ஸ் இசைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகாந்த் இசையமைப்பாளராக உள்ளார். மணிகாந்த் கத்ரி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


துபாயில் பணியாற்றி வரும் இவரது மற்றொரு மகன் குரு இன்று மங்களூருவை வந்தடைந்த பின்னர் கத்ரி கோபால்நாத்தின் இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும் என்பது தெரிய வரும்.


இவருக்கு மனைவி இருக்கிறார். கர்நாடகா மாநிலத்தில் மங்களூருவில் இருக்கும் மித்தகரே என்ற இடத்தில் டிசம்பர் 11, 1949ல் பிறந்தார். இவரது பெற்றோர் தனியப்பா, கங்கம்மா ஆவார். கோபால்நாத்தின் தந்தை ஒரு நாதசுவரக் கலைஞராவார்.


மைசூர் அரண்மனையில் ஒருமுறை இசைக்குழு ஒன்று சாக்சபோனை வாசித்தது. அப்போது, கோபால்நாத் அந்த இசையால் ஈர்க்கப்பட்டு, சாக்சபோனை கற்று சிறந்த கலைஞரானார். மங்களூரின் கலாநிகேதன் அமைப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சபோன் வாசிப்பை கோபால்நாத் கற்றார். பின்னர், சென்னையில் பிரபல மிருதங்க இசைக் கலைஞராக விளங்கிய டி. வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.


இவருக்கு 2018ல் கம்பன் புகழ் விருதை அகில இலங்கை கம்பன் கழகம் வழங்கியது. 2018ல் கர்நாடக கலாஸ்ரீ விருதும், 1998ல் கர்நாடக ராஜ்யோட்சவா விருதும், 2004ல் இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருதும் வழங்கி கோபால்நாத்தை கவுரவித்தது. மேலும் தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. தனது தனித் திறனுக்காக இவர் பெற்ற விருதுகள் ஏராளம். அடாது இசைமழை பொழிந்து விடாது விருதுகள் பல பெற்று வருபவர் என பாராட்டப்பட்டவர். இவரை இழந்ததில் இசையுலகம் பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளதாக பல்வேறு கலைஞர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News