Kathir News
Begin typing your search above and press return to search.

நீதிமன்றங்களில் கோடிக்கணக்கில் குவிந்து வரும் நிலுவை வழக்குகள்: விரைவில் பைசல் செய்ய மோடி அரசு புதிய யுக்தி!!

நீதிமன்றங்களில் கோடிக்கணக்கில் குவிந்து வரும் நிலுவை வழக்குகள்: விரைவில் பைசல் செய்ய மோடி அரசு புதிய யுக்தி!!

நீதிமன்றங்களில் கோடிக்கணக்கில் குவிந்து வரும் நிலுவை வழக்குகள்: விரைவில் பைசல் செய்ய மோடி அரசு புதிய யுக்தி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Oct 2019 8:50 AM GMT


நீதிநிர்வாக கட்டமைப்புகளில் சில மாற்றம் செய்வதன் மூலம் நிலுவை வழக்குகளை சீக்கிரம் பைசல் செய்ய புதிய யுக்தி ஒன்றை மோடி அரசு உருவாக்கியுள்ளதாகவும், இது குறித்து மூத்த சட்ட நிபுணர்களுடன் அரசு நேற்றைய கூட்டத்தில் விவாதித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.


இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கிட்டத்தட்ட 3.3 கோடிக்கு மேற்பட்ட வழக்குகள் பைசல் செய்யப்படாமல் மலைபோல குவிந்துள்ளன. இதனால் முக்கியமான புதிய வழக்குகளுக்கும் முடிவு காண்பதில் நீண்ட கால தாமதமாகிறது.


இந்த நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு தேங்கியுள்ள வழக்குககளுக்கு விரைவில் முடிவு காணுமாறும், மீண்டும் நிலுவை ஏற்படாமல் இருப்பதற்கான வழி வகைகளை கண்டுபிடிக்க மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு இறுதியாக அறிவுறுத்தியுள்ளது.


மேற்கண்ட பிரச்சனைகளை தற்போதுள்ள அமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைத் ஏற்படுத்த தொடங்குமாறு அரசாங்கம் சட்ட அமைச்சகத்திடம் கேட்டுள்ளது, குறிப்பாக மாவட்ட அளவில் துணை நீதிமன்றங்களில் 2.84 கோடி வழக்குகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளன.


இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 25 ஆம் தேதி, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பிரச்சனைகளை சமாளிப்பதற்கான யோசனைகளை பரிந்துரைக்குமாறு அரசாங்கத்தின் முக்கிய சட்ட வல்லுநர்களைக் கேட்டுக் கொண்டது.


இது தொடர்பாக அமைச்சகத்தின் அனைத்து முக்கிய உயர் அதிகாரிகளுக்கும் நீதித்துறையின் இணைச் செயலாளர் ஜி.ஆர்.ராகவேந்தர் எழுதிய கடிதத்தில், "வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கான நீதிமன்ற நடைமுறையை மறு கட்டமைப்பு செய்வது" போன்ற யோசனையை தெரிவித்துள்ளார். இதன் மூலம் நீதித்துறை மீதான சுமையை குறைக்க முடியும் .


மற்றொரு யோசனை மாவட்ட மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பை வழங்குவதும், துணை நீதி மன்ற அமைப்புகளின் வலிமையை அதிகரிப்பதும் ஆகும்.


இந்த விவகாரத்தில் செயல்திறன் குறித்த தரத்தை நிர்ணயிக்கவும் மோடி அரசாங்கம் சிந்திக்கிறது, இது நீதித்துறை அமைப்பில் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்கும். இது தொடர்பாக சட்ட அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) டெல்லியில் மிக முக்கிய ஆலோசனை ஒன்றை நிபுணர்களுடன் கலந்தாலோசித்தது.


உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் மிகவும் அதிகமாக நிலுவையில் இருப்பது குறித்து 2019 ஜூன் மாதம் இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். நீதிபதிகளின் அதிகாரத்தை அதிகரிக்கவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை 65 ஆண்டுகளாக உயர்த்தவும் சி.ஜே.ஐ பரிந்துரைத்திருந்தது.


பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நீதிபதி கோகோய், "உயர் நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்குகள் தேங்கி கொண்டே இருப்பதற்கு முக்கியக் காரணம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பற்றாக்குறை என்றும் அதில் போதுமான அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையில் 37 சதவீதம் இடங்கள் காலியாக உள்ளதாக கூறியுள்ளார் . "


வழக்குகள் நிலுவைப் பிரச்சினை மிக மோசமாக இருப்பதால் இந்த பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


உயர்நீதிமன்றங்களில், 43 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, உச்சநீதிமன்றத்தில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 60,000 ஐத் தொட்டுள்ளது.


நிலுவை வழக்குகளால் முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ளது ஏழை மக்கள்தான் என்றும், ஏராளமான சிவில் வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதால் நிலைமை மோசமாக உள்ளது.


சிறைச்சாலைகளில் பெருகி வரும் கைதிகளின் எண்ணிக்கைக்கு காரணமே பல ஆயிரக்கணக்கான வழக்குகள் உடனடியாக தீர்க்கப்படாமல் முடன்கியுள்ளதே காரணம் எனக் கூறப்படுகிறது.


மாநிலங்களின் நிலைமையைப் பொருத்தவரை, உத்தரபிரதேசத்தில் மட்டும் 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 33.22 லட்சம், மேற்கு வங்கத்தில் 17.59 லட்சம்,  பீகாரில் 16.58 லட்சம் மற்றும் குஜராத்தில் 16.45 இலட்சம் வழக்குகள் நீண்ட நாள் நிலுவையில் உள்ளன. இதேபோல குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிலும் துணை நீதிமன்றங்களில் அதிக சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.


This is a Translated Article From SWARAJYA


Next Story
கதிர் தொகுப்பு
Trending News