Kathir News
Begin typing your search above and press return to search.

சக்தி வாய்ந்த 10 பொருளாதார நாடுகளின் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்தது இந்தியா! கனடா, இத்தாலியை பின்னுக்குத் தள்ளி சாதனை!!

சக்தி வாய்ந்த 10 பொருளாதார நாடுகளின் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்தது இந்தியா! கனடா, இத்தாலியை பின்னுக்குத் தள்ளி சாதனை!!

சக்தி வாய்ந்த 10 பொருளாதார நாடுகளின் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்தது இந்தியா! கனடா, இத்தாலியை பின்னுக்குத் தள்ளி சாதனை!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Oct 2019 6:06 AM GMT


உலகின் சக்தி வாய்ந்த பொருளாதார நாடுகளின் முதல் 10 நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றும், உலகளாவிய பொருளாதார மந்தத்திலும் இத்தாலி, கனடா ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா இந்த நிலையை அடைந்தது பெருமைக்குரிய சாதனை என்றும் உலக பொருளாதார நிலையை ஆய்வு செய்து கூறும் பிராண்ட் ஃபைனான்ஸ் பத்திரிகை தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.


பிராண்ட் ஃபைனான்ஸின் 2019 ஆண்டு ஆய்வு அறிக்கையின்படி, இந்தியா இரண்டு இடங்களை தாண்டி உலக தரவரிசை பட்டியலில் ஏழாவது மிக மதிப்புமிக்க தேசிய பிராண்ட் நாடாக மாறியுள்ளது. ஏற்கனவே 9-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு இரண்டு இடங்களை தாண்டி 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் வேறு எந்த நாடுகள் எதுவும் முதல் 10 இடங்களுக்குள் புதிதாக வரவில்லை. அமெரிக்கா தனது முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. சீனா அதன் பிராண்ட் மதிப்பை 40% அதிகரித்துள்ளது. மறுபுறம், ஜெர்மனி தனது பிராண்ட் மதிப்பில் 5.7% வீழ்ச்சியை சந்தித்தாலும் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் தொடர்கிறது.


நெருக்கடியில் இருந்து மீளும் இந்தியா


இந்த பிராண்ட் கிளப்பில் புதிதாக நுழைந்தவர்கள் யாரும் இல்லை என்றாலும், 18.7% (2.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்) அளவுக்கு தனது மதிப்பை உயர்த்தியுள்ள இந்தியா, முதல் 10 இடங்களுக்குள் 9-வது இடத்தில் இருந்து 7-வது இடத்தை பிடித்து ஒரே ஆண்டுக்குள் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது பெருமைக்குரியது. ஏனெனில் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் அது இந்த நிலையை அடைந்துள்ளது பெருமைக்குரியது என்றும், இந்தியப் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.


இருப்பினும், உற்பத்தி மற்றும் கட்டமைப்புத் துறைகளில் சமீபத்திய மந்தநிலை காரணமாக தற்போது வளர்ச்சி சிறிய சுணக்கத்தை சந்தித்தாலும், மேக் இன் இந்தியா கொள்கைகள் மூலம் நாட்டின் வெளிப்பாட்டை அதிகரிக்க பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது, இதில் 'மேக் இன் இந்தியா' மற்றும் ஸ்வச் பாரத் பணிகள் குறிப்பிடத்தக்கவையாகும்.


முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகளில் கனடாவும் அடங்கும், இது 7-க்கும் மேல் முதல் 8-க்குள் குறைந்தே உள்ளது; இப் பட்டியலில் இத்தாலி 8 முதல் 10-வது இடத்திலும், தென் கொரியா 10 முதல் 9-வது இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.


Input Credits: Republic World News


Next Story
கதிர் தொகுப்பு
Trending News