Kathir News
Begin typing your search above and press return to search.

பிரமிப்பூட்டும் பெரும் ஆலயங்களும், ஆச்சர்யமூட்டும் ஆன்மீக ஸ்தலங்களும்! #KathirIndic #PrambananTemple

பிரமிப்பூட்டும் பெரும் ஆலயங்களும், ஆச்சர்யமூட்டும் ஆன்மீக ஸ்தலங்களும்! #KathirIndic #PrambananTemple

பிரமிப்பூட்டும் பெரும் ஆலயங்களும், ஆச்சர்யமூட்டும் ஆன்மீக ஸ்தலங்களும்! #KathirIndic #PrambananTemple

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Oct 2019 6:46 AM GMT


பிரம்மனன் அல்லது ராரா ஜாங்ராங் என்கிற பிரமிப்பூட்டும் இடம் 9-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவின் யோக்யகர்தா எனும் இடத்தில் கட்டப்பட்ட கோவில் தொகுப்பு வளாகம்(Temple Complex). இந்த வளாகத்தினுள் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்கு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.


இக்கோவில் வளாகத்தின் மதில் சுவர்க்கள் கிட்டத்தட்ட 17 கி.மீ நீளத்திற்கு நீண்டு நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. இக்கோவில் வளாகம் #UNESCO உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இந்தோனேசியாவின் மிகப்பெரிய கோவிலாகவும், தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாம் பெரிய கோவில் வளாகமாகவும் இருப்பது இதன் தனிச்சிறப்பு.


பிரம்மனன் என சொல்லப்படுகிற இந்த கோவில் வளாகத்தினுள் மொத்தம் 240 கோவில்கள் உள்ளன. இந்த 240 என்கிற எண்ணிக்கையுள் மும்மூர்த்திகளுக்கு மூன்று பெரும் கோவில், கருடன், ஹம்சா மற்றும் நந்தி ஆகிய வாகனங்களுக்கென மூன்று பிரத்யேக கோவில்கள். மேலும், பல பிரிவுகளாக சிறு சிறு கோவில்கள், இவைகளை தவிர்த்து 224 கோவில்கள் ஒரு சதுர வடிவில் வரிசையாக கட்டப்பட்டிருப்பது இதன் தனித்துவத்தை கூட்டுகிற அம்சமாக திகழ்கிறது.


இந்த கோவில் வளாகம் மொத்தம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது, வெளிப்புற பகுதி, மத்திய பகுதி(இந்த பகுதியுனுள் தான் நூற்றுக்கணக்கான சிறு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன) இறுதியாக உட்புற பகுதி இதுவே மிக முக்கியமான மற்றும் புனிதப்பகுதியாக கருதப்படுகிறது. இங்கு தான் மும்மூர்த்திகளுக்கென மூன்று பிரத்தியேக கோவில்கள் உட்பட 8 பெரிய கோவில்களும், 8 சிறிய கோவில்களும் உள்ளன.


இந்த உட்புற பகுதியில் இடம்பெற்றிருக்க கூடிய கோவில்கள் அனைத்தும் மறு சீரமைப்பு செய்யப்பட்டவை. ஆனால் சிறு கோவில்களாக இருக்கக்கூடிய 224 கோவில்களில் வெறும் 2 கோவில்கள் மட்டுமே புணரமைக்கப்பட்டுள்ளன. மீதமிருப்பவை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. அங்கே மீந்திருப்பவை வெறும் சிதறிக்கிடக்கும் கற்கள் மட்டுமே.


புனித்தலமாக கருதப்படும் கோவில் வளாகத்தின் உட்புறத்தில் இருக்ககூடிய 8 முக்கிய கோவில்கள் கண்டி என அழைக்கப்படுகிறது. மும்மூர்த்திகளுக்கு தனித்தனியே எழுப்பப்பட்டிருக்கும் கோவில்களில் சிவனுக்கு எழுப்பப்பட்டிருக்கும் கோவில் தான் இருப்பதிலேயே மிகப்பெரிய கோவில். இது 47 மீட்டர் உயரமும் 34 மீட்டர் அகலமும் கொண்ட கோவிலாக திகழ்கிறது. இக்கோவிலின் கிழக்கு வாயிலை ஒட்டி காக்கும் கடவுள்களான மஹாக்காலனுக்கும், நந்திஸ்வரருக்கும் சிறப்பு கோவில்கள் உண்டு. அந்த வளாகத்தினுள் ராமாயண கதைகளை விளக்கும் விதத்தில் காட்சி கூடமும் உண்டு.


பிரம்மனன் கோவில் வளாகத்தின் கட்டமைப்பு இந்து கட்டிடக்கலையின் அடிப்படையிலும் மற்றும் இந்து மரபின் வாஸ்து சாஸ்திர அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பிரம்மனின் ஆதிப்பெயர் சிவக்கிரஹா எனவே வழங்கப்பட்டு வந்தது. ஆதியில் இது சிவனுக்கெனவே அர்பணிக்கப்பட்டு வந்தது. இக்கோவிலின் மொத்த வடிவமும் இந்துக்களின் புராணங்களில் சொல்லப்படும் புனித மலையான மேருவை பிரதிபலிக்கும் வகையிலேயே கட்டப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News