Kathir News
Begin typing your search above and press return to search.

உலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்!!

உலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்!!

உலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Oct 2019 10:44 AM GMT


இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி 200 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்துள்ளது.
அந்த தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


இந்த வெற்றியின் மூலம் 40 புள்ளிகளுடன் சேர்த்து இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
4 டெஸ்ட் போட்டிகள் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று 200 புள்ளிகள் பெற்று உள்ளது. மேற்கு இந்திய தீவுக்கு எதிரான 2 டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் 120 புள்ளிகள் கிடைத்தது. அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் 40 புள்ளிகள் கிடைத்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் இலங்கையை விட இந்தியா 140 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.





அதுமட்டும் இல்லாமல் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 2013 ஆண்டு பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்தியா சொந்த மண்ணில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.


இதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடரை வென்றதே சாதனையாக இருந்தது. இதை இந்தியா முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது.
ஆஸ்திரேலியா அணி 2 முறை (1994- 2001, 2004-2008) உள்நாட்டில் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News