Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.100 கோடி வர்த்தகம்: பிரதமர் மோடியால் புதிய உச்சம் தொட்ட தமிழகத்தின் சிறுமுகை பட்டு : நாட்டின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் குவியும் ஆர்டர்கள்!

ரூ.100 கோடி வர்த்தகம்: பிரதமர் மோடியால் புதிய உச்சம் தொட்ட தமிழகத்தின் சிறுமுகை பட்டு : நாட்டின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் குவியும் ஆர்டர்கள்!

ரூ.100 கோடி வர்த்தகம்: பிரதமர் மோடியால் புதிய உச்சம் தொட்ட தமிழகத்தின் சிறுமுகை பட்டு : நாட்டின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் குவியும் ஆர்டர்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Oct 2019 12:27 PM GMT


சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தமிழக வருகை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதால் மத்திய அரசும், மாநில அரசும் பல சுவாரசியமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.


அரசு சார்பில் சீன அதிபருக்கு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சிறுமுகை பகுதி கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்ட சால்வைகளும் பரிசளிக்கப்பட்டது. சிறுமுகை ராமலிங்க சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் தயாரிக்கப்பட்டு, சீன நாட்டு கொடியினை நினைவுப்படுத்தும் இந்த சிவப்பு நிற சால்வைகள், கிளாசிக் பட்டு நூல்களை பயன்படுத்தி சீன அதிபர் புன்சிரிப்புடன் இருப்பது தத்ரூபமாக நெய்யப்பட்டிருந்தது.


கைத்தறி நெசவா ளர்களின் இந்த கைவண்ணம் உலகிற்கு பட்டை அறிமுகப்படுத்திய சீனத்து அதிபரையே வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. சீனத்திற்கு பயணம் செய்யும் இந்த சிறுமுகை சால்வை முன்பு நின்று சீன அதிபரும், இந்திய பிரதமரும் புகைப்படம் எடுத்துக்கொண்டது அதன் சிறப்பை சுட்டிக்காட்டுவதாகவே அமைந்தது. இதனால், ஒரே நாளில் உலகம் முழுவதும் புகழ் வட்டத்திற்குள் சிறுமுகை பட்டு ரகங்கள் வந்துள்ளன.


சிறுமுகையில் உள்ள 17 கைத்தறி நெசவு கூட்டுறவு உற்பத்தி சங்கங்கள் மூலம் மட்டும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டி கைக்கு ரூ.60 கோடிக்கும் மேல்மென்பட்டு சேலை ரகங்கள் வர்த்தகம் ஆகியுள்ள நிலையில், சீன அதிபருக்கு பட்டு சால்வை வழங்கியதன் மூலம் கிடைத்த வரவேற்பு காரணமாக இவ்வாண்டு இதனை நூறு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உற்பத்தியும் விற்பனையும் தீவிர மாகியுள்ளது.


இங்குள்ள ஒவ்வொரு கைத்தறி கூட்டுறவு சங்கமும் ஐந்து முதல் எட்டு கோடி ரூபாய்க்கு வர்த்தக இலக்கு நிர்ணயித்துள்ளதால் இவ்வாண்டு தீபா வளி பண்டிகை விற்பனை கண்டிப்பாக நூறு கோடியை எட்டும் எனவும் சீன அதிபரின் வருகைக்கு பின்னர் வடமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் கைத்தறி கூட்டுறவு சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News