Top
undefined
Begin typing your search above and press return to search.

2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி - இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை!

2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி - இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை!

KathirBy : Kathir

  |  16 Oct 2019 1:35 PM GMT


காபி ஏற்றுமதியை பொறுத்தவரையில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. பிரேசில் முதலிடத்திலும், வியட்நாம் 2-வது இடத்திலும் உள்ளன. இந்தோனேஷியா 3-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் இருந்து இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அதிக அளவில் காபி இறக்குமதி செய்கின்றன.


கடந்த 2018 ஆம் ஆண்டில் காபி ஏற்றுமதி 3.50 லட்சம் டன்னாக இருந்தது. முந்தைய ஆண்டில் அது 3.78 லட்சம் டன்னாக இருந்தது.


நடப்பு 2019-ஆம் ஆண்டில், ஜனவரி 1 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான காலத்தில் 65 கோடி டாலருக்கு காபி ஏற்றுமதியாகி உள்ளதாக காபி வாரியம் தெரிவித்துள்ளது. இதே காலத்தில், அளவு அடிப்படையில், காபி ஏற்றுமதி 2.89 லட்சம் டன்னில் இருந்து 2.90 லட்சம் டன்னாக உயர்ந்து இருக்கிறது.


இந்தியாவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலமும், பிரேசிலில் ஏப்ரல்-மார்ச் காலமும், கியூபா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஜூலை-ஜூன் மாத காலமும் காபி சந்தைப் பருவங்களாக உள்ளன.


எனினும் சர்வதேச அளவில் இந்தியாவில் கடைபிடிக்கப்படுவதை போல அக்டோபர்-செப்டம்பர் மாத காலம் தான் காபி பருவமாக உள்ளது.


Next Story