Top
undefined
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை நேரடியாக கண்காணிக்க மத்திய அரசு முடிவு !! நிர்மலா சீத்தாராமன் அதிரடி .!

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை நேரடியாக கண்காணிக்க மத்திய அரசு முடிவு !! நிர்மலா சீத்தாராமன் அதிரடி .!

KathirBy : Kathir

  |  16 Oct 2019 9:41 AM GMT



நாடு முழுவதும் இலட்சக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் , நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு வீட்டு வசதி வங்கிகள் உட்பட ஏராளமான பெயரில் இவைகள் இயங்கி வந்தாலும் இவற்றை இயக்குபவர்கள் பெரும்பாலும் உள்ளூர் அரசியல்வாதிகள்தான். இவர்களின் நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கி தலையிடுவதில்லை.


இந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கூட்டுறவு வங்கிகளுமே தெளிவான, வலுவான விதிமுறைகள் இன்றி உள்ளூர் அரசியல்வாதிகளின் சொந்த விருப்பங்களுக்கேற்ப செயல்படுவதால் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. பொது மக்கள் வைப்பு பணமும் மோசடி செய்யப்படுகின்றன.


சமீபத்தில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கிகளில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீட்டால் பல்லாயிரக்கணக்கான கோடிகள் ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு இந்த ஊழலின் பின்னணியில் சரத்பவார் மற்றும் பல உள்ளூர் அரசியல் தலைவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளுக்கு வலுவான விதிமுறைகளை அமல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) மற்றும் நிதி அமைச்சகம் இப்போது தயாராகி வருகின்றன.


எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்துள்ள அறிக்கையின்படி, ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் இப்போது கூட்டுறவு வங்கிகளைக் கண்காணிக்க மேம்பட்ட கட்டமைப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த புதிய கட்டமைப்பின் மையத்தில் கடுமையான விதிமுறைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வைப்புத்தொகையாளர்களின் நலன்களும் வங்கியின் மறுமலர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திகழும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற சனிக்கிழமை (அக்டோபர் 12) ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸை சந்தித்து கூட்டுறவு வங்கிகளின் வைப்புத்தொகையாளர்களின் கவலைகள் “விரைவாக தீர்க்கப்படும்” என்று உறுதியளித்தார்.


Next Story