Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.!

தமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.!

தமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே  எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த   பதிலடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Oct 2019 12:04 PM GMT


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜிற்கு தமிழ் தெரியாது, மற்ற மொழிகள் மட்டும் தெரியும் என டுவிட்டரில் கேலி செய்தவர்களிற்கு அவர் தமிழில் பதில் அளித்துள்ளதுடன் "தமிழ் என் தாய் மொழி" என குறிப்பிட்டுள்ளார்.


தென்னாபிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித்தொடரை இந்திய பெண்கள் அணியினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் பெண்கள் கிரிக்கெட் உலகில் 20 வருடங்களை பூர்த்தி செய்த ஒரேயொரு வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் மித்தாலி ராஜ் நிகழ்த்தியுள்ளார்.


மித்தாலி ராஜின் இந்த சாதனையை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் பாராட்டியிருந்தார்.




https://twitter.com/sachin_rt/status/1183757237606633472


சச்சின் டெண்டுல்கரின் இந்த டுவிட்டிற்கு பதிலளித்திருந்த மித்தாலி ராஜ் ஆங்கிலத்தில் "நான் எனது வாழ்க்கை முழுவதும் உதாரணமாக கொண்ட நபர் ஒருவரால் பாரட்டுப்பெறுவது மிகவும் சிறப்பான ஒன்று" என தெரிவித்துள்ளார்.




https://twitter.com/M_Raj03/status/1183960364699930624


மித்தாலி ராஜின் இந்த டுவிட்டிற்கு கருத்து தெரிவித்த சிலர் தமிழ் தெரியாதா என கேள்வி எழுப்பினர். அதற்கு ஒருவர் அவருக்கு தமிழ் தெரியாது, அவருக்கு ஆங்கிலம் தெரியாது. தெலுங்கும், இந்தியும் தெரியும் என குறிப்பிட்டிருந்தார்.




https://twitter.com/vasugi29/status/1183982090745827328


இதற்கு பதிலளித்துள்ள மித்தாலி ராஜ் தமிழ் என் தாய்மொழி நான் நன்றாக தமிழ்பேசுவேன் தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் இந்தியன் என்ற அடிப்படையில் நான் பெருமைப்படுகின்றேன் எனவும் மித்தலி ராஜ் குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/M_Raj03/status/1184149591651827712

Next Story
கதிர் தொகுப்பு
Trending News