Top
undefined
Begin typing your search above and press return to search.

"முஸ்லிம்கள் எந்த மசூதியில் வேணாலும் வழிபடலாம்! ஆனால் இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற இயலாது!" - வக்கீல் பராசரன் வாதம்!!

"முஸ்லிம்கள் எந்த மசூதியில் வேணாலும் வழிபடலாம்! ஆனால் இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற இயலாது!" - வக்கீல் பராசரன் வாதம்!!

KathirBy : Kathir

  |  16 Oct 2019 6:17 AM GMT


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணை நாளையுடன் நிறைவேறுகிறது. நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்க படுகிறது. இதனால் அயோத்தி மாவட்டத்தில் 144 தடை ஆணையும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் சுவாரஸ்யமான வாதங்கள் நடந்தன.


இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் சுவாரஸ்யமான வாதங்கள் நடந்தன. ராம் லல்லா என்ற இந்து அமைப்பின் சார்பாக வக்கீல் பராசரன் வாதம் செய்தார். இவர் சபரிமலை வழக்கிலும் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வாதம் செய்தபோது, “அயோத்தியாவில் மட்டும் சுமார் 50 - 60 மசூதிகள் இருக்கின்றன. அங்கு உள்ள இத்தனை மசூதிகளில் எந்த மசூதியில் வேண்டுமானாலும் இஸ்லாமியர்களால் நமாஸ் செய்து வழிபட முடியும். ஆனால் இதற்கு மாறாக இந்துக்கள் ராமரின் பிறந்த இடமாக நம்பப்பட்டு வரும் அந்த இடத்தை மாற்ற இயலாது” என்று பராசரன் கூறினார்.


இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் மிகவும் ஆவலாக எதிர்பார்க்க பட்டு வருகிறது. இந்து சமுதாயம் முழுவதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.


Next Story