Top
undefined
Begin typing your search above and press return to search.

"ஜனநாயகத்துக்கு எதிரான துணிச்சலான போராட்டத்தில் தி.மு.க..." - மு.க.ஸ்டாலினை தொடர்ந்து உளறிக்கொட்டும் தி.மு.க அதிகாரப்பூர்வ அறிக்கைகள்!

ஜனநாயகத்துக்கு எதிரான துணிச்சலான போராட்டத்தில் தி.மு.க... - மு.க.ஸ்டாலினை தொடர்ந்து உளறிக்கொட்டும் தி.மு.க அதிகாரப்பூர்வ அறிக்கைகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2019 7:57 AM GMT


தி.மு.க தலைவர் பொன்முடியை வின் டீவி சமீபத்தில் நேர்காணல் எடுத்தது. அந்த நேர்காணலில் பத்திரிக்கையாளர் மதன் பொன்முடியிடம் "அவசர நிலை பிரகடனத்தின் போது மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை" என்ற கேள்வியை கேட்டு இரா. செழியன் எழுதிய "Shah Commission of Inquiry- Lost and Regained" என்று ஒரு தொகுப்பை மேற்கோள் காட்டினார். அதற்கு பொன்முடி அது குறித்து தனக்கு தகவல் இல்லை என சொல்லவே அடுத்த கட்டத்திற்கு நேர்காணல் நகர்ந்தது.


இதை எதிர்த்து தி.மு.க நேற்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு வின் டிவியையும் பத்திரிக்கையாளர் மதனையும் சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்தது.




https://www.facebook.com/arivalayam/posts/2690959574268177:0?tn=K-R


இதில் விசேஷம் என்னவென்றால் மு.க.ஸ்டாலின் மேடைகளில் உளறுவதை போலவே தி.மு.க அறிக்கைகளிலும் சமீப காலங்களில் பிழைகள் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது.


அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் "ஜனநாயகத்துக்கு எதிரான துணிச்சலான போராட்டத்தில் தி.மு.க" என தவறாக இருக்கவே தற்போது வைரலாகி வருகிறது.







https://www.facebook.com/photo.php?fbid=1912645682214592&set=a.322737157872127&type=3&theater


"மு.க.ஸ்டாலினின் உளறல் தி.மு.க-வையும் தொத்தி விழுங்கப்போகிறதே" என குமுறுகின்றனர் உடன் பிறப்புகள்.


Next Story