Top
undefined
Begin typing your search above and press return to search.

"வாய்ப்பை தவறவிடாதீர்கள், மின்சார வாகனத்தை பயன்படுத்துங்க" - நிதின் கட்காரி

வாய்ப்பை தவறவிடாதீர்கள், மின்சார வாகனத்தை பயன்படுத்துங்க - நிதின் கட்காரி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2019 4:33 AM GMT


டெல்லியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மின்சார பைக்கை அறிமுகம் செய்த பின் பேசிய மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, "அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களைப் போன்று விலையும் மிக குறைவானதாக இருக்கும்" என்றார்.


பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்குப் பதில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவதற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு காலவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கட்காரி தெரிவித்துள்ளார்.


மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதும் குறையும் என்பதால், புரட்சிகரமான இந்த இயக்கத்தை தவறவிட்டு விடக் கூடாது என்றும் நிதின் கட்காரி குறிப்பிட்டார்.


Next Story