Top
undefined
Begin typing your search above and press return to search.

20,000 புதிய ஷாகாக்கள், ஒரே ஆண்டில் 1.03 லட்சம் புதிய உறுப்பினர்கள்! விரிவடையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம்! #RSS

20,000 புதிய ஷாகாக்கள், ஒரே ஆண்டில் 1.03 லட்சம் புதிய உறுப்பினர்கள்! விரிவடையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம்! #RSS

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2019 4:15 AM GMT


2010 முதல் 2014 வரை சுமார் 20,000 புதிய ஷாகாக்கள்(ஆர்.எஸ்.எஸ் முகாம்கள்) அமைக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பு ஆண்டில் மட்டும் 1 இலட்சம் பேருக்கும் அதிகமானோர் இயக்கத்தில் சேர இணையதளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ் இணை பொது செயலாளர் மன்மோகன் வைத்யா கூறியுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


நேற்று புதன்கிழமை(அக்டோபர் 16) ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை வகுக்கும் அமைப்பான அகில பாரதிய காரியகர்த்தா மண்டலின் மூன்று நாள் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மன்மோகன் வைத்யா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்:


தற்போதுள்ள ஷாகாக்களில் 60 சதவீத ஷாகாக்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களையும், கிட்டத்தட்ட 29 சதவீத ஷாகாக்கள் இளம் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களைக் கொண்டுள்ளதாகக் கூறினார்.


ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர முன்பைவிட மக்கள் மத்தியில் அதிக அளவில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், இணைய தள போர்ட்டல் மூலம் சேர்வதற்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


குறிப்பிடத்தக்க வகையில், 2013-ஆம் ஆண்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் இணையதளத்தில் சுமார் 28,000 கோரிக்கைகள் பெறப்பட்டன, இது 2019-ஆம் ஆண்டின் 9 மாதங்களில் 1.03 லட்சமாக அதிகரித்துள்ளது என்று வைத்யா கூறினார்.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தப்போது சமூக மாற்றத்தை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும், 5,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பணியாற்றுவதாகவும், அங்கு தீண்டாமையை முடிவுக்குக் கொண்டு வர பாடுபட்டு வருவதாகவும் வைத்தியா கூறினார்.


Next Story