Top
undefined
Begin typing your search above and press return to search.

முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது! ஸ்டாலினை வச்சு செய்த ராமதாஸ்.!

முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது! ஸ்டாலினை வச்சு செய்த ராமதாஸ்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2019 6:29 AM GMT



வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சில வாரங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளிவந்தது. அதனை பலர் கண்டு பாராட்டி வருகின்றனர். இந்த படம் பஞ்சமி நிலம் உரிமை மீட்பை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டதால் பாராட்டுகள் மிக அதிகமாகவே வருகின்றன.


இன்று காலையில் இந்த படத்தை பாராட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். "அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனிற்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷிற்கும் பாராட்டுகள்", என திமுக தலைவர் ஸ்டாலின் பதிவு செய்திருந்தார்.




https://twitter.com/mkstalin/status/1184657095259353089


ஆனால் இவ்வாறு பேசும் ஸ்டாலினின் போலித்தனத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடைத்துளார். திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலங்களை வளைக்கப்பட்டு கட்டப்பட்டதை பாமக நிறுவனர் அம்பலப்படுத்தியுள்ளார். "பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!", இவ்வாறு ராமதாஸ் பதிவு செய்துள்ளார்.




https://twitter.com/drramadoss/status/1184697228603953153


இந்த ராமதாஸின் பதிவு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


Next Story