Top
undefined
Begin typing your search above and press return to search.

இதற்கு முன்பு எந்த ஒரு பிரதமரும் எடுக்கத் துணியாத நடவடிக்கையை எடுத்த பிரதமர் மோடி!

இதற்கு முன்பு எந்த ஒரு பிரதமரும் எடுக்கத் துணியாத நடவடிக்கையை எடுத்த பிரதமர் மோடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2019 4:27 AM GMT


ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


ஆட்சியை தக்க வைப்பதற்காக பா.ஜ.க இரவு - பகலாக களப்பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் ஹரியானா மாநிலம் தியோகவனில் நடந்த பா.ஜ.க தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:


இதற்கு முன்பு எந்த ஒரு பிரதமரும் எடுக்கத் துணியாத தேவையான நடவடிக்கையை பிரதமர் மோடி மட்டுமே எடுத்தார்.1990-ஆம்- ஆண்டு முதல் இன்று வரை காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை கொடுத்து பாகிஸ்தான் தூண்டி விட்டது. தீவிரவாதத்தால் 40 ஆயிரம் பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தில் தற்போது தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு வருகிறது. அமைதி திரும்பி வருகிறது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.


Next Story