Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்து மகா சபா முன்னாள் தலைவர் சுட்டு கொலை!!

இந்து மகா சபா முன்னாள் தலைவர் சுட்டு கொலை!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2019 10:45 AM GMT


இந்து சமாஜ் கட்சியின் தலைவரும், இந்து மகாசபாவின் முன்னாள் தலைவருமான கமலேஷ் திவாரி லக்னோவில் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூட்டால் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.


முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.


சில வருடங்களுக்கு முன் நபிகள் நாயகம் மீது சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டம் அவர் மீது பாயப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் அவருக்கு எதிராக பாவப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிறகு ரத்து செய்தது.


இந்த மாதம் இவர் கொலைசெய்யப்பட்ட நான்காவுது வலதுசாரி தலைவராவார்.


அக்டோபர் 8 ஆம் தேதி, பாஜக தலைவர் சவுத்ரி யஷ்பால் சிங் இதேபோல் தியோபந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்டோபர் 10 ம் தேதி, பாஸ்தியில் பாஜக தலைவர் கபீர் திவாரி சுட்டுக் கொல்லப்பட்டார், அக்டோபர் 13 ம் தேதி, சஹாரன்பூரில் உள்ள தியோபந்தில் பாஜக கார்ப்பரேட்டர் தாரா சிங், 47, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


Next Story