Top
undefined
Begin typing your search above and press return to search.

பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிரொலி : பசுக்களின் எண்ணிக்கை சென்ற 6 ஆண்டுகளில் 18 சதவீதம் அதிகரிப்பு.!

பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிரொலி :  பசுக்களின் எண்ணிக்கை சென்ற 6 ஆண்டுகளில் 18 சதவீதம் அதிகரிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2019 6:15 AM GMT



2012-ல் இருந்த பசுக்களின் எண்ணிக்கையை விட தற்போது பசுக்களின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு எடுத்துள்ள 20-வது கால்நடை கணக்கெடுப்பு தொடர்பான சென்சஸ் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.


இதில், எருமைகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், நாய்கள், முயல்கள் மற்றும் யானைகள், மற்றும் கோழிகள், வாத்துகள், ஈமு எனப்படும் கோழிகள், வான்கோழிகள், காடைகள் மற்றும் பிற கோழிகள் ஆகியவை கணக்கிடப்பட்டுள்ளன.


அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


''2019 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 192.49 மில்லியன். இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததை விட 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது .


2019 ஆம் ஆண்டில் மாடுகளின் எண்ணிக்கை மட்டும் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளை 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த கால்நடை எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது.


இதில் பசுக்களின் தொகை 145.12 மில்லியன் ஆகும். இது முந்தைய கணக்கெடுப்பை விட (2012) 18 சதவீதம் அதிகரித்துள்ளது.


பசுக்கள் மற்றும் எருமைகள் உட்பட மொத்த பால் வழங்கும் கால்நடைகள் 125.34 மில்லியன் ஆகும். இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது.






இவ்வாறு மத்திய அரசின் கால்நடை கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்துக்காக பால் வளர்ச்சி திட்டங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. மேலும் மத்திய அரசின் பசு பாதுகாப்பு திட்டங்களும், பாரம்பரிய பசு பாதுகாப்பு திட்டங்களும், இந்துத்துவ அமைப்புகள் பல மாநிலங்களில் கோசாலைகள் அமைத்து செயல்படுவதாலும், மேலும் இயற்கை உர கண்ணோட்டத்தில் நாட்டுப் பசுக்கள் மீதான விழிப்புணர்ச்சி உண்டாகி இருப்பதாலும் பசுக்களின் எண்ணிக்கை முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு 2014ஆம் ஆண்டு கொண்டு வந்தது. என்றாலும் நாட்டுமாடுகள் வளர்ப்பு முன்பை விட சற்று குறைந்து, அதிக அளவில் மக்கள் கலப்பின பசுக்கள் மீதே ஆர்வம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.


Next Story