Kathir News
Begin typing your search above and press return to search.

என் உயிரினும் மேலான உடன் பிறப்பே! வீட்டு செக்யூரிட்டியை அடித்து துவம்சம் செய்தவர்கள்தான் என் அருமை புதல்வர்கள் என்பது உனக்கு தெரியுமா?

என் உயிரினும் மேலான உடன் பிறப்பே! வீட்டு செக்யூரிட்டியை அடித்து துவம்சம் செய்தவர்கள்தான் என் அருமை புதல்வர்கள் என்பது உனக்கு தெரியுமா?

என் உயிரினும் மேலான உடன் பிறப்பே!  வீட்டு செக்யூரிட்டியை அடித்து துவம்சம் செய்தவர்கள்தான் என் அருமை புதல்வர்கள் என்பது உனக்கு தெரியுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2019 9:58 AM GMT



அன்றொரு நாள் 1983-ம் ஆண்டு டிசம்பர் மாதம் . 4 ந் தேதி ஸ்டாலினும் , அவரது சகோதரர் தமிழரசின் மீதும் இராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஓன்று கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரில் வீட்டுக்கு காவல் பணி புரிந்து வந்த செக்யூரிட்டியை ஒரு தனிப்பட்ட விஷயமாக அன்பு மகன்கள் ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரர் தமிழரசு ஆகியோர் செக்யூரிட்டியின் பணியை செய்ய விடாமல் , அவரை மேலும் நகர விடாமல் செய்தனர். ஆனால் செக்யூரிட்டி தனது பணியில் கறாராக இருந்ததை அடுத்து அவர் மீது ஆவேசமாக பாய்ந்து அவரைக் காயப்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


புகாரை அடுத்து ஸ்டாலினும், தமிழரசும் கைது செய்யப்பட்ட நிலையில் உடனடியாக அவர்கள் வெளியே அதிகம் செய்தி பரவாத நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். என்றாலும்
இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3- ந்தேதி சைதாப்பேட்டை 18 வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டு முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் பாரதி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மு.க.தமிழரசு மட்டும் நேரில் ஆஜரானார். ஆனால் ஸ்டாலின் வராததை அடுத்து மீண்டும் விசாரணை 16 ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு கடைசியில் இந்த வழக்கு பலரின் தலையீட்டினால் அம்பேல் ஆனது. ரகசியமாக முடித்து வைக்கப்பட்ட சம்பவம் இது என்றாலும் ஒரு சில பத்திரிக்கையில் மட்டும் இது வெளியானது. என்றாலும் உடன் பிறப்பே உன்னில் ஏராளமான பேருக்கு இது தெரிய வாய்ப்பில்லை.


இப்போதாவது தெரிந்து கொள் .. நான் ஏன் எனது பதவியை எவருக்கும் இறுதி வரை அளிக்கவில்லை என்று .


Next Story
கதிர் தொகுப்பு
Trending News