Kathir News
Begin typing your search above and press return to search.

GST-யை கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

GST-யை கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

GST-யை கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2019 10:42 AM GMT


GST என்பது மத்திய அரசு தன்னிச்சையாக தான்தோன்றித்தனத்துடன் அறிமுகப்படுத்திய வரி கிடையாது. நடைமுறையில் இருந்த எண்ணற்ற வரிகளை ஒருமுகப்படுத்தி அனைத்து மாநில அரசின் ஒப்புதலுக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது தான் GST.


மக்கள் பலர் தமது அரசியல் விருப்பு வெறுப்பு காரணமாக தவறாக முன்வைக்கும் கருத்தை ஆராயாமலேயே அதனை ஏற்றுக்கொள்கின்றனர். சமூக ஊடகம் இன்று அனைவரது கையிலும் இருப்பதால் நொடிப்பொழுதில் அது பலரின் பார்வைக்கு செல்கிறது.


ஒரு விஷத்தை பற்றிய விவரம் அறியவேண்டுமானால் அதில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் கேட்டறிய வேண்டும். தேர்தலுக்கு முன் GST வரியை gabbar singh வரி என்று சாடியும், காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றால் ஏற்றால் GST வரியை அப்புறப்படுத்துவோம் என்று ராகுல் முழங்கியதற்கு, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு Confederation of All India Traders (CAIT) பதிலடி கொடுத்தது.


அரசியல் விளம்பரம் தேடுவதற்காக ராகுல் காந்தி வர்த்தகர்களை பலி ஆடாக்கும் செயல்புரிவதாக, வர்த்தகர்களின் கூட்டமைப்பு தனது கவலையையும் எதிர்ப்பையும் பதிவு செய்தது. ஜிஎஸ்டி-யை அப்புறப்படுத்தப்போவதாக அறிவிக்கும் ராகுலிடம் அதற்கான மாற்றுத்திட்டம் ஒன்றுமில்லை என்றும், அரசியல் லாபத்திற்காக வர்த்தகர்களின் வாழ்க்கையில் விளையாடினால் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் பல ஆண்டுகள் காங்கிரஸ் நாடாண்ட போது வர்த்தகர்களுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


ஆதாரம்: CAIT slams Rahul's statement on abolishing GST


GST-யை கண்களை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்களுக்காகவும், கடந்த ஆட்சியில் சொல்லும் அளவுக்கு எந்த ஊழலும் இல்லை என்ற போதும் அரசு மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கிறது என்று கூறுபவர்களுக்காக ஒரு உதாரணம். GST காலத்திற்கு முன் மோட்டார் சைக்கிள் வரி 30% GST காலத்திற்கு பின் 28%, அதாவது உங்களுக்கு 2% பணம் மிச்சம். இந்த 28% வரியும் இனி 18% ஆகப்போகிறது. அதாவது, 70,000 ரூபாயில் விற்கப்படும் Honda unicorn 150 motorcycle 28% வரி என்பது 19,600 இதுவே 18% ஆகும் போது உங்களுக்கு 7000 ரூபாய் மிச்சம்.


ஆதாரம்: GST Effect On Bikes: Prices In India - NDTV CarAndBike


Thomson reuters Finance மற்றும் price waterhouse coopers நிறுவனங்களில் நிதி ஆலோசகராக பணிபுரிந்த ஒருவரிடம் "ஏன் ஜிஎஸ்டி-யை சிலர் எதிர்க்கின்றனர்" என்று வினவியபோது. சிலருக்கு லாபம் என்பது அவர் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி தொகை என்னும் அளவில் மட்டுமே இருந்து வந்தது (business with very low margin) ஆதலால் பல காலம் வரி ஏய்ப்பு செய்து வந்தனர் என்றும், இன்று ஜிஎஸ்டி-க்கு பிறகு அத்தகைய செயல்களை செய்ய முடியாது என்ற சூழ்நிலை ஏற்படும்போது ஓசை அதிகமாக கேட்கிறது என்றும் பதிலளித்தார் என கூறியுள்ளார் அரசியல் ஆர்வலர் நாராயணன்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News