Top
undefined
Begin typing your search above and press return to search.

இஸ்லாமியர்களின் நிலத்தை அபகரித்த தி.மு.க? இது தான் இஸ்லாமியர்களுக்கு தி.மு.க வின் உதவியா?

இஸ்லாமியர்களின் நிலத்தை அபகரித்த தி.மு.க? இது தான் இஸ்லாமியர்களுக்கு தி.மு.க வின் உதவியா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2019 7:28 AM GMT


அசுரன் படத்தை பார்த்து விட்டு பாராட்டிய தி.மு.க தலைவர் முக ஸ்டாலின்படம் அல்ல பாடம் என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தி.மு.க.வின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியின் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று குற்றம்சாட்டினார்.அதை திரும்ப ஒப்படையுங்கள் என கூறினார். இதனால் தி.மு.க தலைவர் ஸ்டாலினிற்கும், பாமக நிறுவுனர் ராமதாஸிற்கும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் விவாதம் நடந்து வருகிறது .


இந்நிலையில். இந்திய தேசிய லீக் கட்சியின் தடா இப்ராகிம் , அவரது ட்விட்டர் பக்கத்தில் திருச்சியில் உள்ள தி.மு.க மாவட்ட அலுவலகம் இஸ்லாமிய வக்ப் போர்டிற்கு சொந்தமான நிலம் என குற்றம் சாட்டியுள்ளார்!
சிறுபானபான்மையினர் கட்சி என மார் தட்டி கொள்ளும் திமுக இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்பது தெரியவில்லை!




https://twitter.com/inlparty/status/1185132590694449153


இதனால் தி.மு.க இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து அவர்களின் நிலங்களை தி.மு.க பறிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் பல இஸ்லாமியர்கள் தி.மு.க மீது தனது நம்பிக்கை குறைந்து வருகிறது என்பது இது காட்டுகிறது


Next Story