Kathir News
Begin typing your search above and press return to search.

முதல்வர் யோகி வரும் வரை திவாரியின் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம்! உறவினர்கள் முடிவால் பரபரப்பு!!

முதல்வர் யோகி வரும் வரை திவாரியின் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம்! உறவினர்கள் முடிவால் பரபரப்பு!!

முதல்வர் யோகி வரும் வரை திவாரியின் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம்! உறவினர்கள் முடிவால் பரபரப்பு!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2019 11:24 AM GMT



உத்தர பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி (வயது 45). இவர் இதற்கு முன்பு இந்து மகாசபையில் தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்தார். நேற்று மதியம் லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள அவரது வீட்டில் திடீரென நுழைந்த மத வெறியர்கள் சிலர் அவரை சுட்டுக்கொன்றனர். அவர் அளித்த தேநீரை வாங்கி சாப்பிட்டுவிட்டு அடுத்த சில நொடிகளில் விளங்கு போல பாய்ந்து அவரது கழுத்தை கத்தியால் ஆடு அறுப்பதுபோல அறுத்து அதன் பிறகு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.


இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேர் பிடிபட்டுள்ளனர்.


இந்த படுகொலைக்கு நாடு முழுவதும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இன்று காலையில் திவாரியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சீதாப்பூர் மாவட்டம் மஹ்முதாபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. ஆனால் உடனடியாக இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை.


முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரும் வரை உடலை எரிக்க மாட்டோம் என உறவினர்கள் கூறி உள்ளனர். அங்கு மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே திவாரியின் மனைவி மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும், கணவனைப் பிரிந்து இனி தன்னால் வாழ முடியாது என்றும், தானும் தீக்குளிப்பேன் என கூறுவதால் அங்குள்ளவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News