Kathir News
Begin typing your search above and press return to search.

ஓட்டல்களில் கிளீனர் வேலை பார்த்த ஏழை சிறுவன் ஹசாரே கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை!!

ஓட்டல்களில் கிளீனர் வேலை பார்த்த ஏழை சிறுவன் ஹசாரே கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை!!

ஓட்டல்களில் கிளீனர் வேலை பார்த்த ஏழை சிறுவன் ஹசாரே கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2019 6:23 AM GMT



உத்தரபிரதேச மாநிலத்தில் கூலி வேலை செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர் 17 வயதாகும் யாஷவி ஜெய்ஸ்வால். வறுமையால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு மும்பையில் உணவகம் ஒன்றில் கிளீனராகவும், எடுபிடி வேலைகளையும் பார்த்து வந்தார். பானி பூரி விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். இரவில் படுக்க இடம் இல்லாமல் தவித்த அவருக்கு ஒரு பால் கடையில் இரவு நேரத்தில் மட்டும் தங்க அனுமதி கிடைத்தது. அது நீடிக்கவில்லை.


அதன் பிறகு அவருடைய உறவினர் ஒருவரின் உதவியால் அங்குள்ள முஸ்லிம் யுனைட்டட் கிளப் மைதான கட்டிடத்தில் தங்க அனுமதி கிடைத்தது. அங்கு வரும் மற்ற சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது அவரும் அவ்வப்போது பங்கேற்பதுண்டு.


இடது கையில் பேட்ஸ் பிடித்து அவர் விளாசுவதை பார்த்த பயிற்சியாளர் ஜ்வாலா சிங் என்பவர், இவருக்கு தங்க இடம் அளித்து பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார். சிறுவயதிலேயே ஏ-டிவிஷன் போட்டிகளில் சீனியர் வீரர்களின் பந்துகளை அசாத்தியமாக எதிர்கொண்டதை கண்டு ஆச்சரியமடைந்துள்ளார் பயிற்சியாளர் ஜ்வாலாசிங்.



ஓட்டல்களில் கிளீனர் வேலை பார்த்த ஏழை சிறுவன் ஹசாரே கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை!!


இந்த நிலையில், ஃவிஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 பந்துகளில் 203 ரன்களை விளாசினார். இதன் மூலம் முதல் தரக் கிரிக்கெட்டில் மிகக்குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பிரம்மிக்கத்தக்க சாதனையை படைத்துள்ளார். தன் வசமாக்கியுள்ளார் 17 வயதே நிரம்பிய ஜெய்ஸ்வால். எல்லாப்போட்டிகளிலும் பெரிய ஸ்கோரர்கள் பட்டியலில் வரும் ஜெய்ஸ்வால், நிச்சயம் இந்திய சீனியர் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source :- NEWS 18


Next Story
கதிர் தொகுப்பு
Trending News