Top
undefined
Begin typing your search above and press return to search.

அனாதை இல்லம் அண்ணா அறிவாலயமாக மாறியதா? கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் மாட்டிகொண்ட தி.மு.க !

அனாதை இல்லம் அண்ணா அறிவாலயமாக மாறியதா?  கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் மாட்டிகொண்ட தி.மு.க !

saravanaBy : saravana

  |  20 Oct 2019 6:27 AM GMT


அனாதை இல்லம் கட்டப்போவதாக சொல்லி சென்னை அண்ணாசாலையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலய இடத்திற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளது தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அண்ணா அறிவாலயம் கட்டுவதற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். அந்த இடத்தில் முதலில் ஆதரவற்றோர் இல்லம் கட்டப்படும் என பொய் கூறி சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர் திமுக வினர். சைதை துரைசாமி சென்னை இருந்த வேளையில் சென்னை மாமன்ற கூட்டம் நடைபெற்றது.


அக்கூட்டத்தில், அப்போது சென்னை மாமன்ற உறுப்பினராக இருந்தர் ஆறுமுகம் என்ற சின்னையன், அண்ணா அறிவாலயத்தில் பொதுவெளி நிலங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியுமா? அதற்கு CMDA அனுமதி அளித்துள்ளதா?அந்த பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த அப்போதைய மேயர் சைதை துரைசாமி. "சென்ற 1980-ல் எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டது அதன்பின், ஆளுநர் ஆட்சி நடைபெற்றது அந்த சமயத்தில் தி.மு.க அறக்கட்டளை ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. அண்ணா அறிவாலய இடத்தில் பல அடுக்குமாடி கட்டடம் கட்ட, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் இதில், 10% பொதுவெளி நிலத்தை, அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தது.


பின்னர் 6 ஆண்டுகளுக்கு பிறகு, தி.மு.க அறக்கட்டளையின் தரப்பில சிறப்பு சலுகைகள் கேட்டு அரசாணையில் திருத்தம் கொண்டு வர வேண்டி மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த முறையீடு நிலுவையிலேயே இருந்துள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு, ஆளுநர் ஆட்சியில் ஆதரவற்றோர் இல்லம் கட்டப்போவதாக சொல்லி அப்போதைய தமிழக அரசாங்கத்திடம் சிறப்பு அனுமதியை பெற்றுள்ளனர் தி.மு.க-வினர்.


சென்ற 2004-ஆம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி இருந்த வேளையில் "தி.மு.க அறக்கட்டளைக்கு அளித்த சிறப்பு அனுமதியை ஏன் ரத்து செய்யவில்லை?" என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. திரும்ப தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், 2007-ஆம் ஆண்டு தி.மு.க அறக்கட்டளை ஒரு மிகப்பெரிய விளக்க கடிதத்தை அளித்தது அதை ஏற்று, அதன் மேல் நடவடிக்கை ஏதும் தேவைப்படாது என முடித்து வைக்கப்பட்டது.





அனாதை இல்லம் கட்டுவதற்கு சிறப்பு அனுமதி பெற்றுவிட்டு அதை கட்டமால், இருப்பதால் தி.மு.க மீதும் தி.மு.க அறக்கட்டளை பெற்றுள்ள சிறப்பு ஆணையத்தை ரத்து செய்து பொதுவெளி நிலத்தை மாநகராட்சியிடம் மீதும் ஒப்படைக்கவும் அரசிற்கு பரிந்துரை செய்யப்படும் என அப்போதைய சென்னை மேயர் சைதை துரைசாமி சென்னை மாமன்றத்தில் கூறியுள்ளார்.


பஞ்சமி நிலம் குறித்து பேசிய ஸ்டாலினுக்கு தற்போது தி.மு.க தலைமை அலுவலகம் இருக்கும் இடம் அனாதை இல்லம் கட்ட அனுமதி பெற்றது தெரியாதோ என நெட்டிசன்கள் சரமாரி கேள்விகளை கேட்டு வருகின்றனர்.


பழைய செய்தித்தாள்களில் வந்துள்ளதை ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்.


கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல ஆகிவிட்டது தற்போது திமுக தலைவரின் செயல்பாடுகள் என திமுகவினரே புலம்பும் அளவிற்கு ஆகிவிட்டது என புலம்பி வருகின்றனர்!


Source: தினமலர்


Next Story