Top
undefined
Begin typing your search above and press return to search.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் தான்.! ஸ்டாலினுக்கு சவால் விட்ட பா.ஜ.க வின் தடா பெரியசாமி.!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் தான்.! ஸ்டாலினுக்கு சவால் விட்ட பா.ஜ.க வின் தடா பெரியசாமி.!

saravanaBy : saravana

  |  21 Oct 2019 8:38 AM GMT


பஞ்சமி நிலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே பனிப்போர் நடைப்பெற்று வருகிறது.


இந்த நிலையில் தமிழக பா.ஜ.க வின் செயற்குழு உறுப்பினராக இருப்பவர் தடா பெரியசாமி இவர் தலித் சமூகத்தின் மூத்த தலைவர் இவர் தனது முகநூல் பக்கத்தில் பஞ்சமி நிலம் குறித்து தகவல்களை தந்துள்ளார்!
இது ஸ்டாலினுக்கு சாவல் விடும் விதமாக அமைந்துள்ளது. அவர் முகநூல் பக்கத்தில்


Dr .ராமதாஸ் அவர்கள் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தின் இடம் என்று குறிபிப்பிட்டது #உண்மையே! ஸ்டாலின் அவர்கள் காட்டும் பட்டா 1985 க்கானது. 1923 நிரந்தர கணக்கு பதிவேடு( Permanent Register ), RSR( Re-settlement Paisal Register ), SLR(Settlement Land Register) மற்றும் 1935 ன் Gazette Copy ஆகியவற்றில் மேற்படி சர்வே எண் பற்றி தெரிந்து கொண்டு ஸ்டாலின் அவர்கள் பேசவேண்டும். முதலில் ஒரு தலித்துக்கு சொந்தமாக இருந்து பிறகு இரண்டு தலித் அல்லாதவர்களுக்கு கை மாற்றப்பட்டு, 4 வதாகத்தான் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு வாங்கியுள்ளனர்.1985 ஆவணத்தின் மூலத்தை காண்பிப்பேன் என்பது #வாய்சவடாலே! Dr .ராமதாஸ்,ஸ்டாலின் ஆகியவர்களுக்கிடையான பிரச்சினையின் வழியாக தலித் மக்களின் பஞ்சமி நில மீட்புக்கு #தீர்வு_கிடைக்கட்டும்.


தடா. பெரியசாமி


என குறிப்பிட்டுள்ளார்.


https://www.facebook.com/profile.php?id=100020910663995&__tn__=,dC-R-R&eid=ARBUS8Wt5VwL_l8QLfiKyiZzJ6BUJY0ahcFMfpRlzMXYAn7POTl0pkFcH5w62w_R1tER5h9jTeFe8OK_&hc_ref=ARTtmcgffvNMAwLYCSDGR02k0pQzq4LWSTmPLBrLg4p7HkMWcvLXyyQ4hks8lRVDcTo&fref=nf


Next Story