Kathir News
Begin typing your search above and press return to search.

டாக்டரான முதல்வர் எடப்பாடியார்!!

டாக்டரான முதல்வர் எடப்பாடியார்!!

டாக்டரான முதல்வர் எடப்பாடியார்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Oct 2019 6:52 AM GMT


சென்னை நகரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள், நடிகை ஷோபனா மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விருதை அந்த பல்கலைக்கழகத்தின் நிறுவுனர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். ஏ.சி.சண்முகம் புதிய நீதி கட்சியின் தலைவர் என்பதும், அதிமுக சார்பில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்ச்சியில் டாக்டர் பட்டம் வாங்கிய பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அவரது உரையில் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்தை பற்றி பேசினார்.


அவர் ஆற்றிய உரையில், வாழ்க்கையைக் கற்கவும், ஒரு மனிதனின் அறிவு மேம்படவும் ஏட்டுக் கல்வி மட்டும் போதாது என்றும் இலக்கியம், நீதிக் கதைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்வது மிக அவசியம் என்றும், அப்போதுதான் கல்வியானது முழுமை பெறுகிறது என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


மாணவர்களின் கல்வியை அவர் ஊசியின் கூர்மையோடு ஒப்பிட்டு பேசினார். வாழ்க்கையால் கற்கும் கல்வி மற்றும் பொதுவரிவு ஊசியின் காது போன்றது என்று கூறினார். ஊசியை காது இருந்தால் தான் பயன்படுத்த முடிவது போல, வாழ்க்கை கல்வியும், பொது அறிவும் இருந்தால் தான் மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை சரியாக பயன்படுத்த முடியும் என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News