Top
undefined
Begin typing your search above and press return to search.

ராமர் கோவில் உட்பட இடித்து மசூதி கட்டப்பட்ட 11 கோவில் நிலங்களையும் திருப்பி ஒப்படைக்க வேண்டும்!!

ராமர் கோவில் உட்பட இடித்து மசூதி கட்டப்பட்ட 11 கோவில் நிலங்களையும் திருப்பி ஒப்படைக்க வேண்டும்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Oct 2019 9:07 AM GMT



சுப்ரீம் கோர்ட்டின் தொடர் விசாரணைக்கு பிறகு அயோத்தி ராமர் கோவில் விவகாரம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரப[ப்பு அடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாது காப்புக்காக நாடு முழுவதும் பந்தோபஸ்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் உட்பட மொகலாய மன்னர்களால் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்ட 11 கோவில் நிலங்களையும் முஸ்லிம்கள் மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், நம் முன்னோர்கள் செய்த தவறை நாம் மீண்டும் மீண்டும் செய்வது சரி அல்ல என்றும் உத்தரபிரதேச ஷியா மத்திய வக்ஃப் வாரியத் தலைவர் வசீம் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற சர்ச்சைக்குரிய தளங்கள் அனைத்திலும் முஸ்லிம்கள் தங்கள் வாதங்களை விட்டுவிட்டு, “முன்னோர்களின் தவறுகளைச் சரிசெய்ய” இந்துக்களிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும் என்றும் ரிஸ்வி கூறினார்.


சர்ச்சைக்குரிய இந்து கோவில் கட்டிடங்களில் நமாஸை வழங்க அனுமதி கோரும் சுன்னி முஸ்லிம்களின் அறிக்கைகளுக்குப் பிறகுதான் இத்தகைய கோரிக்கைகள் அதிகரித்துள்ளது என்றும் ரிஸ்வி கூறியுள்ளார். இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படாவிட்டால், அயோத்தி மீதான தீர்ப்புடன் சர்ச்சைகள் முடிவடையாது என்றும் புதிய சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகள் மீண்டும் எழும் என்றார்.


காசி, மதுரா, ஜான்பூர் மற்றும் குதுப்மினார் உட்பட 11 வட இந்திய பிரபல கோவில்களை இடித்து அதன் மீது மசூதி கட்டப்பட்டதாகவும், அவற்றை மீட்டு இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி அயோத்தி வழக்கு போலவே நீதி மன்றங்களில் பல ஆண்டுகளாக வழக்கு நடை பெறுகிறது. மேற்கண்ட மசூதிகளையும் ஒப்படைக்க அனைத்து முஸ்லிம்களும் முன் வரவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


 மேலும் அவர் கூறுகையில் “மசூதிகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், முகலாயர்களால் பறிக்கப்பட்ட கோயில் நிலங்களை திருப்பித் தர வேண்டிய நேரம் இது என்றும் ரிஸ்வி கூறினார்.


This is a Translated Article From OPINDIA


Next Story