Top
undefined
Begin typing your search above and press return to search.

படிக்கும் மாணவர்களை ஏமாற்றி பணம் பறித்த தி.மு.க வட்ட செயலாளர் கைது! தொடரும் தி.மு.க அராஜகங்கள்!

படிக்கும் மாணவர்களை ஏமாற்றி பணம் பறித்த தி.மு.க வட்ட செயலாளர் கைது! தொடரும் தி.மு.க அராஜகங்கள்!

saravanaBy : saravana

  |  22 Oct 2019 10:37 AM GMT


சென்னை சேப்பாக்கம் தி.மு.க வட்டச் செயலாளராக இருப்பவர் எஸ்.எஸ். கண்ணன், இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில் கவித்ரன் என்ற மகனை வைத்து "நம்மகத" என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். பின் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு தனது இரண்டாவது மகன் படிக்கும் கல்லுரியில் நாங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால், பணம் கொடுங்கள் படத்தில் நடிக்கலாம் என ஆசை காட்டியுள்ளார்.


கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த மாணவன் மூர்த்தி கல்லூரியில் படித்துக் கொண்டே வேலை பார்த்து வந்துள்ளான். அந்த வேளையில் சம்பாதித்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கண்ணனிடம் கொடுத்துள்ளார்.


கண்ணனிடம் கொடுத்த பணத்தை வைத்து தான் மூர்த்தி கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில், படத்தில் நடித்தால் பணம் கிடைக்கும், அதை வைத்து பணம் கட்டி விடலாம் என எண்ணி இருந்துள்ளார். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. தான் ஏமாந்ததை அறிந்த மூர்த்தி தி.மு.க வட்ட செயலாளரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு மூர்த்தி தகாத வார்த்தையால் பேசி மாணவன் மூர்த்தியை மிரட்டியுள்ளார்.


இந்நிலையில் வட்ட செயலாளரின் மகன் பல பெண்களை காதலித்து ஏமாற்றியுள்ளார். பல மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, மாணவன் மூர்த்தி இது போல் மாணவர்கள் ஏமாறாமல் இருக்க, தனக்கு நேர்ந்த கொடுமையை வீடியோ ஒன்றில் பதிவிட்டுள்ளார்.


தனது கல்லூரி கட்டணத்தை இழந்து, படிப்பை பாதியில் நிறுத்திய மூர்த்தி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வட்ட செயலாளர் கண்ணன் அவரது இரண்டு மகன்கள் மீதும் புகார் அளித்தார். கைது செய்யப்பட்ட தி.மு.க வட்ட செயலாளர் எஸ்.எஸ். கண்ணன், அவரது மகன் கவித்ரன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.


Next Story