Kathir News
Begin typing your search above and press return to search.

கொஞ்சும் தமிழுக்கும், மலைக்க வைக்கும் மல்லை கடற்கரைக்கும் பிரதமர் மோடி மீண்டும் புகழாரம்!! அவரால் மறக்க முடியவில்லையாம்

கொஞ்சும் தமிழுக்கும், மலைக்க வைக்கும் மல்லை கடற்கரைக்கும் பிரதமர் மோடி மீண்டும் புகழாரம்!! அவரால் மறக்க முடியவில்லையாம்

கொஞ்சும் தமிழுக்கும், மலைக்க வைக்கும் மல்லை கடற்கரைக்கும் பிரதமர் மோடி மீண்டும் புகழாரம்!! அவரால் மறக்க முடியவில்லையாம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Oct 2019 3:29 AM GMT


பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சந்திப்பு அண்மையில் மாமல்லபுரத்தில் நிகழ்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் மாமல்லபுரம் கடற்கரை எழிலையும் வர்ணித்து பிரதமர் மோடி கவிதை ஒன்றினை இயற்றியிருந்தார்.


கவிதையின் தமிழாக்கத்தை சுட்டுரையில் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.


அந்தக் கவிதைக்காக, திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் சுட்டுரையில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


தமிழின்பால் பிரதமர் கொண்டுள்ள பற்றை நாம் போற்ற வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதற்கு சுட்டுரை வாயிலாக பதிலளித்துள்ள பிரதமர் மோடி, கலாசாரச் செறிவும், தொன்மையும் நிறைந்த தமிழ் மொழியில் கருத்துகளை எடுத்துரைப்பது பெரும் உவகையை அளிக்கிறது; தமிழ் மொழி அழகு நிறைந்தது; தமிழர்கள் தனித்துவமிக்கவர்கள் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று நடிகர் விவேக்கும் பிரதமர் மோடியைப் பாராட்டி சுட்டுரையில் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.


அதற்கு நன்றி தெரிவித்து பதிலளித்த பிரதமர், இயற்கையைப் போற்றுவதும், மதிப்பதும் இந்தியப் பண்பாட்டில் இரண்டறக் கலந்த அம்சம்; மாமல்லபுர கடற்கரையின் எழிலும், வைகறை நேர நிசப்தமும்தான் எனது எண்ணங்களை வெளிக்கொணர உரிய தருணத்தை உருவாக்கித் தந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News