Top
undefined
Begin typing your search above and press return to search.

2050 ஆண்டு 2600 ஜிகா வாட்டாக உயரும் காற்றாலை மின் உற்பத்தி - சீனாவை தொடர்ந்து இந்தியா அடைந்த உச்சம்.!

2050 ஆண்டு 2600 ஜிகா வாட்டாக உயரும் காற்றாலை மின் உற்பத்தி - சீனாவை தொடர்ந்து இந்தியா அடைந்த உச்சம்.!

MuruganandhamBy : Muruganandham

  |  23 Oct 2019 12:52 PM GMT


2018 ஆம் ஆண்டில் 230 ஜிகா வாட் திறனாக இருந்த ஆசிய நாடுகளின் காற்றாலை மின் உற்பத்தி 2050 ஆம் ஆண்டு 2600 ஜிகா வாட்டாக உயரும் என்று International Renewable Energy Agency (IRENA) தெரிவித்துள்ளது.


உலகில் பாதிக்கு மேற்பட்ட காற்றாலை மின் உற்பத்தி பங்களிப்பை ஆசிய நாடுகள் பூர்த்தி செய்யும். 2050 ஆம் ஆண்டு சீனா 2,525 ஜிகா வாட் திறனும், அதனை தொடர்ந்து இந்தியா 443 ஜிகா வாட் திறனுடனும், கொரியா 78 ஜிகா வாட் திறனுடனும், தென்கிழக்கு ஆசியா 16 ஜிகா வாட் திறனுடனும் காற்றாலை மின் உற்பத்தி செய்யும் நாடுகளாக விளங்கும்.


2050 ஆண்டு உலகின் மொத்த காற்றாலை மின் உற்பத்தி 6000 ஜிகா வாட்டாக உயரும் என்று சீனாவில் வெளியிடப்பட்ட "Future of Wind" என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாரிஸ் பருவநிலை உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கார்பன் வெளியீட்டை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மரபு சாரா ஆற்றல் மூலமான காற்றாலை மின் உற்பத்தியின் மீது உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.


இதன் மூலமாக காற்றாலை மின் உற்பத்தி துறையில் 2030 ஆம் ஆண்டிற்குள் 3.7 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாகும், 2050 ஆம் ஆண்டிற்குள் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.



Next Story