Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அ.தி.மு.க ! ஸ்டாலின் தலைமை சரிகிறதா?

ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அ.தி.மு.க ! ஸ்டாலின் தலைமை சரிகிறதா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Oct 2019 5:45 AM GMT


கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே அதிமுக முன்னிலை பெற்று வந்தது.இதில் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க விற்கும் நேரடி போட்டி காணப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதி மற்றும் நாங்கு நேரி தொகுதியில் அமோக வெற்றி பெற்றது அ.தி.மு.க இது அதிமுவினருக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது.


அதுமட்டுமில்லாமல் திமுகவிடம் இருந்த இரண்டு தொகுதிகளை கைப்பற்றி இருப்பது மேலும் அதிமுவினருக்கு எழுச்சியை கொடுத்துள்ளது. இந்த இடைத்தேர்தல் 2021 க்கு முன்னோட்டம் என திமுக பொருளாளர் கூறினார்.


அவ்வாறு பார்த்தால் 2021 தேர்தலில் அ.தி.மு.க திமுகவிற்கு கடும் போட்டியாக இருக்கும் என்பது ஐயமில்லை. ஸ்டாலின் தலைமையில் இரண்டு முக்கிய இடைத்தேர்தலில் தோற்றிருப்பது அவரின் தலைமை பண்பை பாதிக்கும்.


அவரால் திமுகவின் மூத்த நிர்வாகிகளை அனுசரித்து செல்லாதது மற்றும் ஒரே எதிர்ப்பு நிலை மோடி ஒரு சமூகத்திற்கு சப்போர்ட் செய்வது என பல கரணங்கள் தான் தி.மு.க வின் தோல்விக்கு காரணம் என்கின்றனர். இந்த தோல்வி மூலம் பாடம் கற்கவிடில் தி.மு.க 2021 ல் கரை சேர்வது கடினம் என்கின்றனர் தி.மு.க வின் முக்கிய புள்ளிகள்.


Next Story