Top
undefined
Begin typing your search above and press return to search.

முரசொலி இடம் தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ! கலக்கத்தில் தி.மு.க.!

முரசொலி இடம் தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ! கலக்கத்தில் தி.மு.க.!

saravanaBy : saravana

  |  24 Oct 2019 11:09 AM GMT


கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே அ.தி.மு.க முன்னிலை பெற்று வந்தது.இதில் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க விற்கும் நேரடி போட்டி காணப்பட்டது. அதிமுக சார்பில் போட்டியிட்ட விக்கிரவாண்டியில் போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் 44,551 ஓட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி அடைந்தார். நாங்குநேரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க வின் நாராயணன் 32,333 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் . இது அதிமுவினருக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது.


இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனி சாமி செய்தியாளர்களிடம் பேசிய போது. இந்த வெற்றி மக்கள் கொடுத்துள்ளது. இது உண்மைக்கான வெற்றி திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.


அதனால் அ.தி.மு.க விற்கு வெற்றியை அளித்துள்ளனர். இந்த மாபெரும் வெற்றிக்கு உழைத்த துணை முதல்வர் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் வாக்களித்த வாக்களர்கள் அனைவருக்கும் நன்றி, தற்போதுள்ள கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என அறிவித்தார் .


செய்தியாளர்கள் முரசொலி நிலம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலவர் எடப்பாடி பழனிச்சாமி
முரசொலி பத்திரிகை அலுவலகம், தலித் மக்களின் பஞ்சமி நிலத்தில் இருப்பது உறுதியாக்கப்பட்டால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என கூறினார் முதல்வர். பஞ்சமி நிலம் குறித்து முதலவர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது திமுகவினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story