Top
undefined
Begin typing your search above and press return to search.

மழை போதும் நிறுத்து கடவுளே ..கோவிலுக்கு சென்று முறையிடும் கர்நாடக மக்கள்!!

மழை போதும் நிறுத்து கடவுளே ..கோவிலுக்கு சென்று முறையிடும் கர்நாடக மக்கள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Oct 2019 6:20 AM GMT



தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவு பெய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறினாலும் மாநிலத்தின் 60 சதவீத பகுதிகளில் ஏரிகளில் ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், தருமபுரி, கரூர், மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது.


புதிதாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையும் பரவலாக நல்ல மழையை இதுவரை கொடுக்கவில்லை. வட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த ஆண்டும் பருவமழை பொய்த்துப் போகுமோ என்று கவலை அடைந்துள்ளனர்.


இந்த நிலையில் கர்நாடகாவில் தென் மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்தது பல இடங்களில் வரலாறு காணாத வெள்ளச் சேதங்கள் ஏற்பட்டன.. தென் மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த பிறகும் தற்போது தலைநகர் பெங்களூரிலும், வடகர்நாடகா மாவட்டங்களான பெலகாவி, ஆவேரி, பாகல் கோட், கதக், யாத்கீர், ராய்ச்சூர், தார்வாட் பகுதிகளில் பலத்த மழை பெய்து மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலபிரபாவில் பொங்கி வரும் மழைவெள்ளத்தில் அருகில் உள்ள கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின மழைக்கு இதுவராய் 1 வாரத்தில் மட்டும் 14 பேர் இறந்து போயுள்ளனர்.


நாராயணபுகா அணையிலிருந்து 3.25 லட்சம் கன அடி தண்ணீர் இரவோடிரவாக எதிரே உள்ள கிராமங்களில் புகுந்தது துவங்கபத்ரா ணையிலிருந்து 1.85 லட்சம் கன அடி எதிரே இருக்கும் கிராமத்துக்குள் புகுந்தது -மக்கள் செய்வதறியாது அங்கும் இங்கும் பரிதஷத்தனர். கோகாக் தாலுகாவும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரை யோர மக்கள் பரிதவிப்புடனுள்ளனர்.


அஜ்ஜாம்புரா தாலுகா உட்பட பல கிராமங்களில் மழை வெள்ளத்தில் பயிர்கள் அடித்து சென்றன கட்டபிரமா அணையும் நிரம்பி வழிகிறது அருகில் உள்ள கிராம மக்கள் பீதியில் உள்ளனர் துங்க பத்ரா அணையிலிருந்து தண்ணீர் அதிகமாக பெருவருவதால் சிந்தனூரு அணையும் உடையும் அபாயத்திலிருக்கிறது. அங்குள்ள ஆஞ்சநேயா கோவிலில் தண்ணீர் புகுந்து விட்டது இயற்கை பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தொடர்ந்து துன்புறுத்தும் மழை இனி வரக்கூடாது என்று கோவில்களுக்கு சென்று வேண்டி வருவதாக வட கர்நாடக மக்கள் கண்ணீருடன் கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Source :-http://dinasudar.co.in/Dinasudar/மழையே-போ-போ


Next Story