Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்திற்கு புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!! பிரதமர் மோடிக்கு நன்றி கூறி முதல்வர் எடப்பாடி கடிதம்

தமிழகத்திற்கு புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!! பிரதமர் மோடிக்கு நன்றி கூறி முதல்வர் எடப்பாடி கடிதம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Oct 2019 1:35 AM GMT


தமிழகத்தில், தற்போது மொத்தம் 23 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இவற்றை பரிசீலித்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கண்ட 6 இடங்களிலும் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்து ள்ளது. ரூ.395 கோடியில் ஒவ்வொரு மருத்துவமனையும் அமைய உள்ளன. இதற்கு, மத்திய அரசு தலா ரூ.195 கோடியும், மாநில அரசு தலா ரூ.130 கோடியும் வழங்க உள்ளன. இதன்மூலம் 900 எம்.பி.பி.எஸ்., சீட்கள் கிடைக்கும் எனவும், அதில் 85 சதவீதம் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீதம் வெளி மாநில மாணவர்களுக்கும் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான நிலம் கையகபடுத்துதல் பணிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களை நியமித்தல் போன்ற பணிகளை தமிழக அரசு தொடங்கிவிட்டது. இந்த கல்லூரிகள் தொடங்கும் போது, அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 ஆக உயர வாய்ப்பு உள்ளது.



முதல்வர் நன்றி
தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவ கல்லுாரிகள் துவங்க மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்


Next Story