Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜி.எஸ்.டி.எளிமையாக்கியதன் மூலம் தான் 142 இடத்தில் இருந்த இந்தியா இப்போது 64 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது -நிர்மலா சீதாராமன்.!

ஜி.எஸ்.டி.எளிமையாக்கியதன் மூலம்  தான் 142 இடத்தில் இருந்த இந்தியா இப்போது 64 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது -நிர்மலா சீதாராமன்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Oct 2019 7:23 AM GMT



உலக வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து எளிதாக வர்த்தகம் செய்வது உள்பட பல்வேறு பிரிவுகளில் உலக நாடுகளை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடுகிறது. இதில் எளிதாக வர்த்தகம் செய்வது பிரிவில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தை பிடித்தது.


இதில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் சிங்கப்பூர், ஹாங்காங், டென்மார்க், கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பட்டியல் குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-





மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) எளிமையாக்கியதன் மூலம் எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. திவால் குறியீடு அமல்படுத்தப்படுவதும் எளிதான வர்த்தகம் பட்டியலில் இந்தியாவை முன்னேற்ற உதவியது. ஜி.எஸ்.டி. மேலும் எளிமையாக்கப்படும். ஆன்லைன் கணக்கு தாக்கலில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
எளிதில் வர்த்தகம் தொடங்க எதுவாக  நாடுகள் பட்டியலில் 2014 ஆம் ஆண்டு இந்தியா 142 இடத்தில் இருந்த இந்தியா இப்போது 63 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


This is a Translated Article from TIMES OF INDIA


Next Story